search icon
என் மலர்tooltip icon
    < Back
    சூர்யாஸ் சாட்டர்டே  Suryas Saturday: Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil
    சூர்யாஸ் சாட்டர்டே  Suryas Saturday: Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil

    சூர்யாஸ் சாட்டர்டே

    இயக்குனர்: விவேக் ஆத்ரேயா
    எடிட்டர்:கார்த்திகா ஸ்ரீனிவாஸ்
    ஒளிப்பதிவாளர்:முரளி ஜி
    இசை:ஜேக்ஸ் பிஜாய்
    வெளியீட்டு தேதி:2024-08-29
    Points:5175

    ட்ரெண்ட்

    வாரம்12345
    தரவரிசை3257746059
    Point2616207831313236
    கரு

    வாரம் ஒருமுறை மட்டும் கோபத்தை வெளிக்காட்டும் கதாநாயகனின் கதை

    விமர்சனம்

    கதைக்களம்

    நானி சிறுவயதில் இருந்து மிகவும் கோபகாரனாக இருக்கிறார். எங்கு போனாலும் ,  அவருக்கு பிடிக்காத விஷயம் நடந்தாலும் சண்டை , அடிதடி என பிரச்சனை செய்கிறார். இதனால் இவரது தாயான அபிராமி நானியின் கோபத்தை கட்டுப்படுத்த வாரம் ஒருமுறை மட்டுமே நானி கோபப்பட வேண்டும் என சத்தியம் வாங்கிக்கொண்டு இறக்கிறார்.

    அதைத்தொடர்ந்து நானி 6 நாட்கள் அவருக்கு தவறு என்று தோன்றும் விஷயமும், அவரை கோபப்படுத்தும் விஷயங்களை நோட்டில் எழுதி வைத்து. அதை சனிக்கிழமை சென்று தவறு செய்தவர்களை அடிக்கிறார்.

    இப்படி சென்று கொண்டிருக்க, அந்த ஊரில் உள்ள ஸ்டேஷனின் கான்ஸ்டபிளாக பிரியங்கா மோகன் இருக்கிறார். இவருடன் நட்பு ஏற்பட்டு காதல் செய்கிறார் நானி. அதே ஸ்டேஷனில் கொடூர வில்லத்தனமான இன்ஸ்பெக்டராக  எஸ் ஜே சூர்யா இருக்கிறார். நானிக்கு கோபம் வந்தால் இவ்வாறு அடிக்கும் பழக்கம் இருக்கிறது என பார்த்தால். எஸ்.ஜே சூர்யாவிற்கு கோபம் வந்தால் சோகுல பாலம் என்ற தனக்கு சொந்தமான ஊர் மக்களை அடித்து தன் கோபத்தை தனித்துக்கொள்கிறார்.

    நானியின் பழி தீர்க்கும் பட்டியலில் எஸ்.ஜே சூர்யா பெயர் இடம் பெறுகிறது. எதனால் நானி ,எஸ் ஜே சூர்யா மீது கோபம் கொள்கிறார்? நானி எப்படி எஸ்.ஜே சூர்யாவை பழிவாங்கினார்? எஸ். ஜே சூர்யா சோகுல பாலம் மக்களை அடிக்க காரணம் என்ன?

    நடிகர்கள்

    நானி வழக்கம் போல் அவரது கேஷுவலான நடிப்பின் மூலம் மக்கள் மனதை கவர்ந்துள்ளார். எஸ்.ஜே சூர்யா வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார். அவரது கதாப்பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார். பிரியங்கா மோகன் பொம்மைப் போல் வந்து படத்தில் அழகு சேர்த்துள்ளார். இவர்களது நடிப்பில் படத்தின் உள்ள லாஜிக் ஓட்டைகள் மறைந்து விடுகிறது.

    இயக்கம்

    வித்தியாசமான ஆக்‌ஷன் திரில்லர் கதையை இயக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் விவேக் ஆத்ரேயா. படத்தின் நேர அளவை இன்னும் குறைத்திருந்தால் திரைப்படம் இன்னும் கூடுதல் சுவாரசியமாக இருந்து இருக்கும். படத்தில் லாஜிக் ஓட்டைகளில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    ஒளிப்பதிவு

    படத்திற்கு முரளி மேற்கொண்டுள்ள ஒளிப்பதிவு வேற லெவல். வாரத்தில் மற்ற நாட்களை மிகவும் கலர்ஃபுல்லாகவும், சனிக்கிழமையை மற்றும் சிவப்பு நிறமாக காட்சியமைத்தது சிறப்பு.

    இசை

    ஜேக்ஸ் பிஜாயின் இசை படத்திற்கு கூடுதல் பலம். கிளைமாக்ஸ் காட்சியில் வரும் பின்னணி இசை படத்தை மேலும் சுவாரசியமாக ஆக்க உதவியுள்ளது.

    தயாரிப்பு

    டிவிவி எண்டர்டெயின்மண்ட் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×