என் மலர்
தி ஸ்மைல் மேன்
- 0
- 0
- 1
வாரம் | 1 |
---|---|
தரவரிசை | 497 |
Point | 4 |
சைக்கோ கொலையாளியை பிடிக்க போராடும் சிபிசிஐடி அதிகாரி.
கதைக்களம்
சிபிசிஐடி அதிகாரியாக இருக்கிறார் சரத்குமார். இவர் ஒரு விபத்தில் சிக்கி பழைய நினைவுகளை இழக்கிறார். மேலும் இதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இறந்ததாக கூறப்படும் பல கொலைகளை செய்த ஸ்மைல் மேன் என்கிற சைக்கோ கொலையாளி மீண்டும் கொலைகளை செய்ய ஆரம்பிக்கிறான்.
ஸ்மைல் மேன் ஏற்கனவே இறந்துவிட்டான். தற்போது செய்வது அவன் இல்லை. வேறு யாரோ செய்கிறான் என்று சரத்குமார் சிபிஐ அதிகாரிகளிடம் கூறுகிறார். இதையடுத்து ஓய்வில் இருக்கும் சரத்குமார் மீண்டும் பணிக்கு திரும்புகிறார்.
இறுதியில் ஸ்மைல் மேன் கொலையாளியை சரத்குமார் பிடித்தாரா? ஸ்மைல் மேன் யார்? அவன் எதற்காக கொலைகள் செய்கிறான்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சரத்குமார், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நினைவுகளை இழந்து தவிக்கும் காட்சிகளிலும், கொலையாளியை எப்படியாவது பிடிக்க நினைக்கும் காட்சிகளிலும் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
சிபிசிஐடி குழுவைச் சேர்ந்தவர்களாக நடித்திருக்கும் சிஜா ரோஸ், ஸ்ரீகுமார் இருவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, திரைக்கதையின் திருப்பங்களுக்கு முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள். கலையரசனின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். இனியா, சுரேஷ் மேனன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
சைக்கோ கொலைகளை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார்கள் இயக்குனர் ஷ்யாம் - பிரவீன். திரைக்கதை தெளிவில்லாமல் இருப்பது படத்திற்கு பலவீனம். விறுவிறுப்பாக தொடங்கும் திரைக்கதை போக போக மந்தமாகி செல்கிறது. கிரைம் திரில்லர் படங்களுக்கு உண்டான டெம்ப்ளேட் இதில் இருந்தாலும் பெரியதாக கவரவில்லை. ஸ்மைல் மேனுக்கான பின்னணி கதை வலுவில்லாமல் இருக்கிறது. படம் பார்க்கும் போது ஸ்மைல் மேனை இப்படி பிடிக்கலாமே, அப்படி பிடிக்கலாமே என்று பார்வையாளர்கள் யூகிக்கும் படி அமைந்து இருப்பது பலவீனம்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன், தனது வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.
இசை
கவாஸ்கர் அவினாஸின் பின்னணி இசை ஓரளவு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.
தயாரிப்பு
Wednesday Stories,Magnum Movies & ka film company தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.