என் மலர்
தென் சென்னை
- 0
- 0
- 1
வாரம் | 1 |
---|---|
தரவரிசை | 498 |
Point | 4 |
தென் சென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்
கதைக்களம்
இக்கதை தென் சென்னையில் நடக்க கூடியதாக அமைந்துள்ளது. மனைவியின் மறைவுக்கு பிறகு பிழைப்பு தேடி சென்னைக்கு வந்து தனக்கு தெரிந்த ஹோட்டல் தொழிலில் தன் திறமை மற்றும் கடின உழைப்பால் தன் மகன் மற்றும் மகளுடன் உழைத்து ஒரு பெரும் ஸ்தாபனத்தை உருவாக்குகிறார் தேவராஜன். மதுரைக்கு ஒரு விழாவுக்கு சென்ற சமயத்தில் அங்கு சாப்பிட்ட உணவின் ருசி மிக அற்புதமாக இருந்ததால் அந்த உணவை சமைத்த ஒரு அண்ணன் தங்கையை தன்னுடன் அழைத்து வந்து அவர்களையும் தன் குடும்பமாக வளர்த்து, தொழிலையும் சேர்த்து வளர்க்கிறார்.
அவர்களை தன் வாரிசுகளுக்கு திருமணமும் செய்து வைக்கிறார். அவர் மறைவுக்கு பிறகு அந்த ஸ்தாபனத்தை நிர்வகிக்கிறார் அவரின் பேரன், நாயகன் ரங்கா.
மறுப்பக்கம் பிளாக் காட் என்ற செக்யூரிட்டி நிறுவனம் இயங்கி வருகிறது. இவரி அவ்வப்போது சட்ட விரோத செயல்களையும் செய்து வருகின்றனர். கிரிக்கெட் மற்றும் சூதாட்ட பணங்களை கையாண்டு வருகின்றனர். இவர்களிந் கைக்குள் ரங்காவின் உணவகம் சென்றுவிடுகிறது. இவரின் ஓட்டலில்தான் பண கைமாத்துவது போன்ற பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்த பணத்தை கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டம் தீட்டி கொண்டு இருக்கின்றனர்.
ஹோட்டல் தொழில் என்ன ஆனது? எதனால் ஹோட்டல் இவர்களின் கைக்கு சென்றது? ஹோட்டலை மீட்க ரங்கா என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகனாக ரங்கா. முதல் படம் என்பதால் நடிப்பில் ஒரு அனுபவமின்மை தெரிகிறது. நிறைய காட்சிகளி ஒரே விதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அது பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. உணர்ச்சிவசமான வசனங்களை உணர்ச்சியே இல்லாமல் பேசியுள்ளார்.
நாயகி ரியா, அழகான மற்றும் அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முன்னாள் ராணுவ அதிகாரி இந்நாள் செக்யூரிட்டி ஏஜன்ஸி நடத்தும் நிதின் மேத்தா சிறப்பான நடிப்பை வெளிப்படித்தியுள்ளார்.
இளங்கோ குமரன், வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரனி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
அறிமுக இயக்குநர் ரங்கா ஒரு வித்தியாசமான களத்தை தேர்வு செய்து கதையை கூற முயற்சி செய்துள்ளார். ஆனாலும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும். காட்சியமைப்பு பெரிதும் கதைக்கு உதவவில்லை.
இசை
ஜென் மார்டினின் பின்னணி இசை இப்படத்திற்கு பெரிய பலம்
ஒளிப்பதிவு
சரத்குமார் இப்படத்திற்காக தனது பெரும் உழைப்பை கொடுத்துள்ளார். தண்ணீருக்கு அடியில் இடம் பெற்றிக்கும் காட்சிகளை எடுத்த விதத்திற்கு பாராட்டுகள்
தயாரிப்பு
RFC Productions தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.