என் மலர்tooltip icon
    < Back
    Theradi
    Theradi

    தேரடி

    இயக்குனர்: முரளி பாண்டியன்
    எடிட்டர்:முரளி பாண்டியன்
    இசை:முரளி பாண்டியன்
    வெளியீட்டு தேதி:2024-07-05
    நடிகர்கள்
      Points:21

      ட்ரெண்ட்

      வாரம்12
      தரவரிசை678592
      Point912
      கரு

      சாதியை எதிர்த்து திருமணம் செய்யும் இளம் ஜோடிகளின் கதை

      விமர்சனம்

      கதைக்களம்

      கதாநாயகன் ஒரு ஆட்டோவை சொந்தமாக வைத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஊரில் அவ்வப்போது சிறுசிறு திருட்டு தொழில் ஈடுப்பட்டு வருகிறார். கதாநாயகி மற்றும் கதாநாயகன் இருவரும் பயங்கரமாக ஒருவக்கு ஒருவர் காதலித்து வருகின்றனர். ஆனால் கதாநாயகி வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் படலம் தீவிரமடைய. தன் காதலுக்கு வீட்டில் சம்மதிக்காதலால் கதாநாயகனுடன் ஊரை விட்டு ஓட முயற்சி செய்கிறார்.

      இது ஒரு பக்கம் இருக்க நாயகனின் நண்பன் மற்றொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்ய நினைக்கிறார் ஆனால் அங்கும் அவர்கள் வீட்டில் திருமணத்தை எதிர்க்கிறார்கள், இவர்களின் காதல் என்ன ஆனது? இந்த இரு ஜோடிகளும் அவர்களின் காதலில் வெற்றி பெற்றார்களா? இவர்களின் பெற்றோர்கள் இவர்களை எதிர்த்து என்ன செய்தனர்? என்பதே படத்தின் மீதிக்கதை.

      நடிகர்கள்

      படத்தின் நாயகனான நடித்து இருக்கும் சரவணன் பாண்டியன் கொடுத்த வேலையை செய்ய முயற்சி செய்துள்ளார். மற்ற நடிகர்கள் யாரும் மனதில் பதியவில்லை

      இயக்கம்

      சாதி மறுத்து திருமணம் செய்யும் போராடும் இளம் ஜோடிகளின் கதையை இயக்க முயற்ச்சித்துள்ளார் முரளி பாண்டியன். திரைக்கதை என்றால் என்ன என்று கற்றுக் கொண்டு படத்தை இயக்கி இருக்கலாம் இயக்குனர். அனைத்து காட்சிகளும் வெட்டப் வெட்டப் பட்டு ஒரு கோர்வையே இல்லாமல் பயணிப்பதால் மக்களுக்கு சலிப்பை ஏற்ப்படுத்துகிறது. சுவாரசியான காட்சிகளை அமைக்க முயற்சி செய்திருக்கலாம்.

      இசை

      முரளி பாண்டியனின் இசை சுமார் ரகம்.

      ஒளிப்பதிவு

      ராமச்சந்திரனின் ஒளிப்பதிவு ஓரளவுக்கு பார்க்க முடிகிறது

      தயாரிப்பு

      BVS நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

      உங்கள் மதிப்பீடு
      இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
      ×