என் மலர்


திமில்
காசுக்காக போதைக் கும்பலுடன் சிக்கிக்கொள்ளும் கதாநாயகனின் கதை
கதைக்களம்
படத்தின் கதாநாயகன் அங்காடி தெரு மகேஷ் பிளஸ் 2 தேர்வில் பல அட்டெம்ப்டுகள் எழுதுயும் தேர்ச்சி பெற முடியாமல் ஒரு டுட்டோரியல் கல்லூரியில் படித்து வருகிறார். பள்ளி பருவத்தில் கதாநாயகி மனிஷாஜித்தை காதலித்து வருகிறார். அன்றாட பணத்தேவைக்காக கிடைக்கும் சிறு சிறு தொழில்களை செய்து வருகிறார் மகேஷ். மகேஷின் நண்பன் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் உள்ளார். அவ்வப்போது கஞ்சாவை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற உதவி வருகிறார். அப்படி ஒரு சூழலில் தெரியாமல் மகேஷ் இதில் உள் நுழைகிறார். அதற்கடுத்து பெரும் பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார். அது என்ன பிரச்சனை? பிரச்சனையில் இருந்து எப்படி தப்பித்தார்? இவரில் காதல் கை கூடியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
அங்காடி தெரு மகேஷ் மற்றும் மனிஷாஜித் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இயக்கம்
வழக்கமான போதைப்பொருள் கும்பலின் கதையை படமாக்க நினைத்து இருக்கிறார் இயக்குனர் எஸ்.காதர். காட்சியமைப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். படம் செல்ல செல்ல பார்வையாளர்களுக்கு சலிப்பை தட்டுகிறது.
ஒளிப்பதிவு
வெங்கடேஷ் அர்ஜூன் ஓரளவுக்கு அவரது பணியை செய்ய முயற்சித்துள்ளார்.
இசை
அல்டிரின் இசை கேட்கும் ரகம், பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை.
தயாரிப்பு
தமிழன் சினிமாஸ் நிறுவனம் திமில் திரைப்படத்தை தயாரித்துள்ளது.








