என் மலர்


தூவல்
ஆற்றங்கரை ஓரத்து மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கதை
கதைக்களம்
ஆற்றங்கரை ஓரத்து கிராமத்தில் இக்கதைக்களம் நடக்கிறது. நீர் வரும் நேரத்தில் மீன் பிடிப்பதை தொழிலாக வைத்து அந்த கிராமம் இயங்கி வருகிறது. நீர் வரத்து இல்லாத காலத்தில் மரம் வெட்டுவது, வேட்டையாடுவது, சாராயம் காய்ச்சும் தொழில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
சில மக்கள் வெடி வைத்து பாறைகளை தகர்க்கும் தொழிலையும் சிலர் செய்து வருகின்றனர். சிலர் வெடிப்போட்டு மீன் பிடிக்கிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் வெடி வைக்கும் போது இதனால் ஒரு சிறுமி இறக்கிறாள். பாறைகளை உடைக்கும் தொழிலை செய்து வரும் வில்லன் பிறகு மீன் பிடி தொழிலுக்கும் வருகிறார். இதனால் ஏற்கனவே அங்கு தொழில் செய்து வருபவர்கள் பாதிப்படைகின்றனர். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு பிறகு என்ன ஆனது? இதனால் ஊருக்கு என்ன பிரச்சனை வந்தது?
நடிகர்கள்
கதையின் நாயகனாக இருக்கும் ராஜ் குமார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்துள்ளார். கிராமவாசிகளாக நடித்த அனைவரும் கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.
இயக்கம்
வித்தியாசமான கதைச்சூழலை தேர்வு செய்து இயக்கியுள்ளார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா. ஆனால் கதை மற்றும் கதையின் பிரச்சனை என்ன ஏதும் தெளிவாமல் கதை நகர்கிறது. காட்சி அமைப்பில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும்
இசை
பத்மா சதீஷின் இசை கேட்கும் ரகம்
ஒளிப்பதிவு
தர்வேஷ் ஒளிப்பதிவு சுமார் ரகம்
தயாரிப்பு
சீகர் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
வித்தியாசமான கதை










