search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    10 வயதில் போலீஸ் அதிகாரியான சிறுவன் - கனவு நிறைவேறியதாக நெகிழ்ச்சி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    10 வயதில் போலீஸ் அதிகாரியான சிறுவன் - கனவு நிறைவேறியதாக நெகிழ்ச்சி

    • பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் தனது மகனின் விருப்பதை தெரிவித்தனர்.
    • சிறப்பு விருந்தினர் சிறுவனுக்கு போலீசார் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கித்வாய் மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மல்லிகார்ஜுன் (வயது 10) என்ற சிறுவன் தனது பெற்றோரிடம் போலீஸ் அதிகாரியாக விரும்புவதாக கூறினான்.

    இது பற்றி பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் தனது மகனின் விருப்பதை தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம், பெங்களூரு நிவாரண அமைப்பு இணைந்து பெங்களூரு வடக்குப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சைதுலு அதாவத்திடம் உதவி கேட்டனர்.

    அதன்படி அவர் சிறுவனுக்கு உதவி செய்தார். நேற்று மல்லிகார்ஜூன் போலீஸ் சீருடை அணிந்து போலீஸ் ஜீப்பில் துணை கமிஷனர் அலுவலகம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.

    சிறப்பு விருந்தினர் சிறுவனுக்கு போலீசார் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் போலீஸ் அணிவகுப்பு மரியாதை காட்டப்பட்டது. போலீஸ் சீருடையில் இடுப்பில் கை துப்பாக்கி, கையில் போலீஸ் லத்தியுடன் அவரை போலீஸ் துணை கமிஷனர் அமரும் நாற்காலியில் அமர வைத்தனர். அப்போது சிறுவன் மல்லிகார்ஜுன் நான் வளர்ந்ததும் டிசிபி ஆகுவேன்' என துணை கமிஷனர் சைதுலு அதாவத்திடம் விருப்பம் தெரிவித்தான். பின்னர் அலுவலகத்தில் இருந்த ஆயுதங்களை தொட்டு பார்த்து அவற்றின் தகவல்களைப் பெற்றான். மேலும் கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கும் அறைக்கு சென்று பார்த்தான்.

    Next Story
    ×