search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி கோவிலில் 1000 ஆண்டு பழமையான ராமர் சிலை கைவிரல் மீண்டும் பொருத்தம்
    X

    திருப்பதி கோவிலில் 1000 ஆண்டு பழமையான ராமர் சிலை கைவிரல் மீண்டும் பொருத்தம்

    • கோவிலில் சில சடங்குகள் செய்து உடைந்த கைவிரலை சீரமைக்கலாம் என தெரிவித்தனர்.
    • இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பஞ்சலோக ராமர் சிலை உள்ளது.

    இந்த ராமர் சிலையின் கைவிரல் ஒன்று திடீரென சேதமடைந்து துண்டித்து விழுந்தது. கோவிலில் சேதம் அடையும் சிலைகளை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளின் போது சீரமைக்க வேண்டும்.

    அடுத்த கும்பாபிஷேகம் 2030-ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதுவரை சாமி சிலையின் விரலை சீரமைக்க கூடாது. அது ஆகம விதியை மீறுவதாகும். துண்டிக்கப்பட்ட விரலை பொருத்த காத்திருக்க வேண்டும் என அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.

    இதனை அடுத்து உடைந்த ராமர் சிலையின் கைவிரல் தங்க கவசத்தால் மூடப்பட்டது. 2021-ம் ஆண்டு முதல் தங்க கவசம் பொருத்தப்பட்ட கைகளுடன் ராமர் சிலை உள்ளது. இந்த நிலையில் புதிதாக பதவி ஏற்ற அறங்காவலர் குழு முன்னிலையில் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டது. அப்போது கோவிலில் சில சடங்குகள் செய்து உடைந்த கைவிரலை சீரமைக்கலாம் என தெரிவித்தனர்.

    உடைந்து விழுந்த ராமர் சிலையின் கைவிரல் கொண்டுவரப்பட்டது. மீண்டும் சிற்பக் கலைஞர்கள் மூலம் பொருத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பழங்கால ராமர் சிலைக்கு மீண்டும் சக்திகளை கொண்டு வருவதற்கு சிறப்பு திருமஞ்சன பூஜைகள் செய்யப்பட்டன. 1000 ஆண்டு பழமையான ராமர் சிலையின் உடைந்த விரல் பொருத்தப்பட்டதால் ஏழுமலையான் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 63, 731 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 22,890 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3. 94 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×