என் மலர்
இந்தியா
ஆந்திராவில் 6 வயது சிறுவனுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு- சென்னையில் சிகிச்சை
- சிறுவனின் ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக சுகாதாரத் துறையை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்றார்.
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், மரிபாடு அடுத்த வெங்கடாபுரத்தை சேர்ந்த 6 வயது சிறுவனுக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
சிறுவனை மீட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறுவனின் ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறுவனின் குடும்பத்தினருக்கும், கிராம மக்களுக்கும் ஜிகா வைரஸ் தொற்று பரவி உள்ளதா என்பதை அறிய சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் முகாம்கள் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மந்திரி ராம் நாராயண ரெட்டி கூறுகையில்:-
ஜிகா வைரஸ் தொற்று குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். கொசுக்கள் மூலம் ஜிகா வைரஸ் பரவுவதால் சுகாதாரத் துறை சார்பில் கொசுவை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக சுகாதாரத் துறையை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்றார்.