search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானா மாணவர்களை சந்திக்க ராகுல் காந்திக்கு தைரியம் இருக்கிறதா?- மத்திய இணை மந்திரி பேச்சு
    X

    தெலுங்கானா மாணவர்களை சந்திக்க ராகுல் காந்திக்கு தைரியம் இருக்கிறதா?- மத்திய இணை மந்திரி பேச்சு

    • தெலுங்கானாவில் வேலையில்லாத இளைஞர்களை காங்கிரஸ் கட்சி ஏமாற்றி வருகிறது.
    • காங்கிரசை விட தெலுங்கானா மக்கள் மோடி மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு வாக்குறுதி அளித்தபடி வேலை வாய்ப்பு வழங்கவில்லை எனக் கூறி பட்டதாரிகள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் அந்த மாநிலத்தின் மூத்த தலைவர் மத்திய உள்துறை இணை மந்திரி பண்டி சஞ்சய் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

    "பாஜக ஆளும் மாநிலங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் பரவுகிறது என்று பேசும் ராகுல் காந்தி, ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்திற்குச் சென்று மாணவர்களுக்கு வாக்குறுதி கொடுக்க முடியுமா. நான் சவால் விடுகிறேன். உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களை சந்திக்க ராகுல் காந்திக்கு தைரியம் இருக்கிறதா?

    தெலுங்கானாவில் வேலையில்லாத இளைஞர்களை காங்கிரஸ் கட்சி ஏமாற்றி வருகிறது. முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி அரசு கடந்த 7 மாதங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கத் தவறிவிட்டது.


    மறுபுறம் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கு கிசான் சம்மான் நிதியை வெளியிட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தினார்.

    தேர்தலின் போது, மாநிலத்தில் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பது, தெலுங்கானா மக்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்து வருவதை எடுத்து க்காட்டுகிறது. காங்கிரசை விட தெலுங்கானா மக்கள் மோடி மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×