search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம்
    X

    கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம்

    • கடந்த 2 நாட்களாக இயக்காமல் நிறுத்தி வைத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • லாரி உரிமையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனம் சுங்க கட்டணத்தை திருப்பி வழங்கி வருகிறது.

    நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.

    இந்த சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 5,500 கியாஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாசை சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு (பாட்லிங் பிளாண்டு) கொண்டு செல்லும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து ஹூப்ளியில் உள்ள சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நாமக்கல்லை சேர்ந்த 200 எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ஒப்பந்த அடிப்படையில் லாரி உரிமையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனம் சுங்க கட்டணத்தை திருப்பி வழங்கி வருகிறது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள தொகையை லாரி உரிமையாளர்களுக்கு வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்து, நாமக்கல்லை சேர்ந்த 200 எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரிகளை கர்நாடக மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக இயக்காமல் நிறுத்தி வைத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டம் குறித்து தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன் கூறியதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளாக நிலுவைத் தொகையை ஆயில் நிறுவனங்கள், தராததால் லாரி உரிமையாளர்களால் தொழில் செய்ய முடியவில்லை. எனவே வேறு வழியில்லாமல் லாரிகளை நிறுத்தி வைத்து உள்ளோம். சுங்க கட்டணம் தொடர்பான நிலுவைத்தொகை கிடைக்கும் வரை லாரிகளை இயக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×