என் மலர்
இந்தியா
4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
- பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வறட்சியால் வறண்டு கிடந்த நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக பெங்களூரு மாநகராட்சி பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழைக்கு ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது.
இந்த நிலையில் நேற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இந்த நிலையில் உத்தரகன்னடா, தார்வாட், ஹாவேரி மற்றும் உடுப்பி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் பெல்காம் மற்றும் குடகு மாவட்டத்தில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் இந்த 2 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோல் பாகல்கோட், கொப்பல், ஷிமோகா மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்களில் சில பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் அதிக காற்று வீச வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பெங்களூரு மாநகரில் வானம் மேககூட்டத்துடன் காணப்படும். வருகிற 12-ந் தேதி வரை கர்நாடகாவில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.