என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மனைவியிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு கர்நாடக வாலிபர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட்
- மனைவியிடம் இருந்து பராமரிப்பு வேண்டும் என்ற வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என நீதிபதி கருத்து.
- மாதாந்திர பராமரிப்பு மற்றும் வழக்கு செலவுகள் ரூ.2 லட்சம் கோரி கணவர் தாக்கல் செய்த மனுவை நிராகரித்து நீதிபதி உத்தரவிட்டார்.
பெங்களூரு:
பொதுவாக விவாகரத்து வழக்குகளில் ஜீவனாம்சம் கேட்டு பெண்கள் வழக்கு தொடர்வது வழக்கம். இதற்கு மாறாக கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் தனது மனைவியிடம் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு தனது சகோதரியின் மகனின் பிறந்தநாளில் கலந்து கொண்டதற்காக கணவன்-மனைவியுடன் சண்டை ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பெற்றோரின் வீட்டிற்கு சென்றார். பின்பு கணவனிடம் விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்
மாதம் ரூ.25 ஆயிரம் ஜீவனாம்சம் கேட்டிருந்தார். குடும்பநல நீதிமன்றம், அவரது மனைவிக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது. இதையடுத்து கணவர் தான் 2 ஆண்டுகளாக வேலையில்லாமல் இருந்ததாகவும், தன்னிடம் பணம் இல்லை. மனைவி பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் தனக்கு ரூ.2. லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவை குடும்ப நல கோர்ட்டு நிராகரித்தது. இதையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா நேற்று தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் மனைவிக்கு ரூ.10 ஆயிரம் பராமரிப்பு மற்றும் வழக்கு செலவு ரூ.25 ஆயிரம் வழங்க குடும்ப நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதிசெய்து, மாதாந்திர பராமரிப்பு மற்றும் வழக்கு செலவுகள் ரூ.2 லட்சம் கோரி கணவர் தாக்கல் செய்த மனுவை நிராகரித்து, உத்தரவிட்டார்.
மனுதாரருக்கு வேலை இல்லை, தன்னைப் பராமரிக்க வழி இல்லை, எனவே, மனைவியை பராமரிக்கும் நிலையில் இல்லை, மனைவியிடம் இருந்து பராமரிப்பு வேண்டும் என்ற வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது, கொரோனா காலத்தில் தனது வேலையை இழந்ததால், அவர் சம்பாதிக்க முடியாதவர் என்று கூற முடியாது.
எனவே, கணவன் தனது சொந்த நடத்தையால் மனைவியின் கைகளில் இருந்து பராமரிப்பைப் பெறுவதன் மூலம் நிதானமான வாழ்க்கையை நடத்த முடிவு செய்துள்ளார் என்பது ஏற்க முடியாதது.
மேலும், இந்து திருமண சட்டத்தின் 24 வது பிரிவின் கீழ் ஏற்க முடியாத செயலாகும். தன்னையும், மனைவியையும், குழந்தையையும் பராமரிப்பது ஒரு திறமையான கணவனின் கடமை, என்று நீதிபதி குறிப்பிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்