search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஹெலிகாப்டர் இறங்கும் வசதியுடன் ஐதராபாத் போலீஸ் கட்டுபாட்டு அலுவலகம் திறப்பு
    X

    ஐதராபாத் போலீஸ் கட்டுபாட்டு அலுவலகம்.

    ஹெலிகாப்டர் இறங்கும் வசதியுடன் ஐதராபாத் போலீஸ் கட்டுபாட்டு அலுவலகம் திறப்பு

    • கட்டுப்பாட்டு அறையில் அமெரிக்க பென்டகன் நகரில் உள்ள ராணுவ மையம் போல அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
    • ஐதராபாத் நகரில் நுழையக்கூடிய ஒவ்வொரு வாகனங்களையும் தனித்தனியாக கண்காணிக்க முடியும்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காவல்துறை புதிய கட்டுப்பாட்டு அலுவலகம் ரூ.500 கோடியில் கட்டப்பட்டுள்ளது.

    20 மாடிகள் இந்த கட்டிடத்தில் உள்ளன. முழுவதும் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது

    இந்த கட்டிடத்தில் 4-வது மாடியில் டி.ஜி.பி அலுவலகம் 18-வது தளத்தில் கமிஷனர் அலுவலகம் இயங்குகிறது. மற்ற உயர்மட்ட அதிகாரிகளின் அறைகள் 7-வது மாடியில் உள்ளன. இந்த கட்டுப்பாட்டு அறையில் அமெரிக்க பென்டகன் நகரில் உள்ள ராணுவ மையம் போல அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் ஹெலிகாப்டர்கள் இறங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர மாநிலம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள 5 லட்சத்திற்கும் அதிகமான கேமராக்களை இந்த அலுவலகத்திலிருந்து கண்காணிக்க முடியும். ஐதராபாத் நகரில் நுழையக்கூடிய ஒவ்வொரு வாகனங்களையும் தனித்தனியாக கண்காணிக்க முடியும்.

    பேரழிவு ஏற்பட்டால் அனைத்து செயல்பாடுகளையும் மையமாக கட்டுப்படுத்தும் வகையில் இந்த அறை அதிநவீன வசதிகளுடன் இயங்குகிறது.

    கடுமையான வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கக்கூடிய வானிலை முன்னறிவிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த புதிய அலுவலகம் தெலுங்கானா மாநிலத்துக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அரணாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×