என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
இந்திய பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதம்- என்.எஸ்.ஓ. தகவல்
- இந்தியாவின் ஜி.டி.பி. ரூ.43.84 லட்சம் கோடியாக இருந்தது.
- காலாண்டில் சுரங்கம், கட்டுமானம், வா்த்தகம் உள்ளிட்ட துறைகளின் உற்பத்தி மதிப்பும் அதிகரித்தது.
புதுடெல்லி:
கடந்த 2023-24-ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 8.2 சதவீதம் வளா்ச்சி அடைந்ததாக தேசிய புள்ளியியல் அலுவலக (என்.எஸ்.ஒ.) புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-23-ம் நிதியாண்டில், இந்தியாவின் ஜி.டி.பி. வளா்ச்சி 7 சதவீதமாக இருந்தது. இது 2023-24-ம் நிதியாண்டில் 8.2 சதவீதமாக வளா்ச்சியடைந்துள்ளது. இதற்கு உற்பத்தித் துறை சிறப்பாகச் செயல்பட்டது முக்கிய காரணம். இந்த வளா்ச்சி இந்தியாவின் பொருளாதார மதிப்பு 3.5 டிரில்லியன் டாலரை (சுமாா் ரூ.292 லட்சம் கோடி) எட்ட உதவியதுடன், அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார மதிப்பு 5 டிரில்லியன் டாலரை (சுமாா் ரூ.417 லட்சம் கோடி) எட்ட வழியமைத்துள்ளது.
கடந்த 2022-23-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில், இந்தியாவின் ஜி.டி.பி. ரூ.43.84 லட்சம் கோடியாக இருந்தது. இது 2023-24-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் ரூ.47.24 லட்சம் கோடியாக 7.8 சதவீதம் வளா்ச்சியடைந்தது.
கடந்த 2022-23-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் உற்பத்தித் துறையின் மொத்த மதிப்பு 0.9 சதவீதமாக இருந்தது. இது 2023-24-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் 8.9 சதவீதமாக வளா்ச்சி அடைந்தது.
இதேபோல 2022-23-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2023-24-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் சுரங்கம், கட்டுமானம், வா்த்தகம் உள்ளிட்ட துறைகளின் உற்பத்தி மதிப்பும் அதிகரித்தது.
2022-23-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் வேளாண் துறையின் உற்பத்தி மதிப்பு 7.6 சதவீதமாக இருந்தது. இது 2023-24-ம் நிதியாண் டின் 4-வது காலாண்டில் 0.6 சதவீதமாக கடுமையாக சரிந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.