என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சிக்கன் கபாப், மீன் வறுவலுக்கு ரசாயன பொடிகளை பயன்படுத்த தடை
- மீன் வகைகளின் 36 மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.
- வண்ண பொடிகளை பயன்படுத்தினால் அத்தகைய கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெங்களூர்:
கர்நாடகாவில் சிக்கன் கபாப் உள்ளிட்ட எண்ணெயில் பொறிக்கப்படும் சிக்கன் துண்டுகள், மீன் வறுவலுக்கு பயன்படுத்தப்படும் வண்ண பொடியில் உடல் நலத்திற்கு கேடு ஏற்படுத்தக் கூடிய வண்ண பொடி பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து கர்நாடக அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர துறையினர், சில மாதங்களுக்கு முன்பு சிக்கன் கபாப், எண்ணையில் பொறிக்கப்பட்ட மீன் வகைகளின் 36 மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.
அதில் பயன்படுத்தப்படும் வண்ண பொடியில் சன்செட் எல்லோ, கார்மோசின் ஆகிய உடல் நலத்திற்கு கேடு ஏற்படுத்தும் ரசாயனம் கலந்துள்ளது உறுதியானது. இத்தகைய உணவுகளை சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து சிக்கன் கபாப், மீன் வறுவல்களில் இந்த உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொடிகளை பயன்படுத்த தடை விதித்து கர்நாடக அரசின் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி தடை செய்யப்பட்டுள்ள அந்த வண்ண பொடிகளை பயன்படுத்தினால் அத்தகைய கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.