என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பிரஜ்வல் ஆபாச வீடியோ வெளியானது தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் 18 இடங்களில் சோதனை
- கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் தேவராஜ கவுடா கைது செய்யப்பட்டார்.
- பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தும் பெங்களூருவில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச படம் வெளியான விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. இந்த வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள பிரஜ்வலை கைது செய்ய சர்வதேச அளவில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பிரஜ்வல் ஆபாச வீடியோவை வெளியிட்டது தொடர்பாக அவரது முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் பா.ஜ.க. பிரமுகர் வக்கீல் தேவராஜ கவுடா ஆகியோர் மீது சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் தேவராஜ கவுடா கைது செய்யப்பட்டார். இதற்கிடையே ஆபாச படங்கள் வெளியான இணையதளங்கள் குறித்த பட்டியலை சேகரித்து அவற்றை நீக்க சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இந்த ஆபாச படங்கள் இருந்தால் அழிக்கவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.
இந்த நிலையில் பிரஜ்வல் ஆபாச வீடியோ வெளியானது தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் 18 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பா.ஜ.க. மாநில பொதுசெயலாளர் பிரீதம் கவுடா என்பவரது வீட்டில் நடத்திய சோதனையில் 7 பென் டிரைவ்கள், 6 ஹார்ட்டு டிஸ்க்குகள், 4 லேப் டாப்கள், 3 டெஸ்க் டாப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தும் பெங்களூருவில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பென் டிரைவ் மற்றும் லேப் டாப்புகள் பிரஜ்வல் வழக்குடன் தொடர்புடையதா? இல்லையா? என்ற அறிக்கை வந்தபின்பு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிரஜ்வல் கர்நாடகாவில் யார், யாருடன் தொடர்பில் இருந்து வருகிறார் என்றும் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்