search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் 40 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை
    X

    கர்நாடகாவில் 40 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை

    • கர்நாடகாவில் இன்று அதிகாலை முதல் 40 இடங்களில் லோக் ஆயுக்தா போலீார் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • சோதனை நடந்து வரும் இடங்களுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில், இன்று அதிகாலை முதல் 10 மாவட்டங்களில் 40 இடங்களில் லோக் ஆயுக்தா போலீார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக பொறியாளர் அனுமந்தராயப்பா, பொதுப்பணித்துறை மாண்டியா கோட்ட பொறியாளர் ஹர்ஷா, சிக்மகளூர் வணிகவரி அலுவலர் நேத்ராவதி, ஹாசன், உணவு ஆய்வாளர் ஜெகநாத் ஜி கொப்பல், வனத்துறை அலுவலர் ரேணுகாமா, சாம்ராஜ்நகர் ஊரக குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர் ரவி, மைசூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணை அலுவலர் யக்ஞேனந்திரா, பெல்லாரி உதவி பேராசிரியர் ரவி, விஜயநகர மாவட்ட எரிசக்தி துறை அதிகாரி பாஸ்கர், மங்களூரு மெஸ்தாம் அதிகாரி சாந்தகுமார் ஆகியோருக்கு தொடர்புடைய 40 இடங்களில் இந்த சோதனை நடந்துவருகிறது என லோக் ஆயுக்தா வட்டாரங்கள் தெரிவித்தன.

    குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது உறவினர்கள், பினாமிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், பண்ணை வீடுகள், வணிக வளாகங்களில் இந்த அதிரடி சோதனை நடந்து வருகிறது.

    லோக் ஆயுக்தா போலீசார் 40 இடங்களில் நடத்தி வரும் சோதனையால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சோதனை நடந்து வரும் இடங்களுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×