என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மேகதாது திட்டம்: காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்படும்- துணை முதல் மந்திரி அறிவிப்பால் பரபரப்பு
- முதல் கட்ட பணிகளுக்காக கடந்த பா.ஜ.க ஆட்சியில் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டது.
- பிரதமருக்கு நெருக்கமான தேவகவுடா இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறுவாரா?
பெங்களூரு:
கர்நாடகாவில் கனகபுரா என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டது. ரூ.9 ஆயிரம் கோடியில் இந்த திட்டத்ததை செயல்படுத்த கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த அணை மூலம் 67.14 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே காவிரி ஆற்றின் குறுக்கே ஹேரங்கி, ஹேமாவதி கபினி, கிருஷ்ணராஜர் சாகர் அணை கட்டி கர்நாடக அரசு 115 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வருகிறது. இந்த நிலையில் மேகதாது அணை கட்டினால். தமிழகத்தில் பாயும் காவிரி நீரோட்டம் குறைந்து பாலைவனமாக மாறிவிடும் என்பதால், தமிழகத்தில் மேகதாது திட்டத்திற்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஆனாலும் கர்நாடக அரசு அணை கட்டுமானத்திற்கு திட்ட அறிக்கை தயாரித்து மத்திய சுற்றுச் சூழல் துறைக்கு ஒப்புதலுக்கு அனுப்பியது. மேலும் முதல் கட்ட பணிகளுக்காக கடந்த பா.ஜ.க ஆட்சியில் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டது. மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், விவசாயிகளும், தமிழக அரசும் கடுமையாக இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.
இதற்கிடையே கர்நாடகாவில் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான புதிய ஆட்சியும் மேகதாது அணையை கட்ட தீவிரம் காட்டியது. துணை முதல் அமைச்சர் டி.கே. சிவக்குமார் நீர்பாசனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மேகதாது அணை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.1000 கோடி நிதியை நிலம் கையகப்படுத்துவதற்கு பயன்படுத்தி இருக்கலாம். ஏன் அதை செய்யவில்லை என்றும் இத்தகைய திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றும் பேசினார். அவரது பேச்சு தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கர்நாடக முதல் மந்திரி டி.கே. சிவக்குமார் கர்நாடக மாநிலம் பெரியபட்னா தாலுகாவில் உள்ள 79 கிராமங்களில் உள்ள 150 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் மேகதாது அணை திட்டம் நிறைவேற்றப்படும். பெங்களூருவின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யவதற்காக முன்வைக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு நிலம் வழங்க சாம்ராஜ்நகர், மைசூரு, மண்டியா மற்றும் பெங்களூரு கிராமபுற மாவட்டங்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அவர்களுக்கு இழப்பீடு மற்றும் மாற்று இடம் வழங்குவது தொடர்பாக கணக்கெடுப்பு நடத்த வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. மேலும் வனத்துறை அதிகாரிகள் மர கணக்கெடுப்பை தொடங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா பாதயாத்திரை சென்றது குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய டி.கே. சிவக்குமார், பிரதமருக்கு நெருக்கமான தேவகவுடா இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறுவாரா? என்றார். மேலும் இந்த திட்டத்திற்காக மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற தவறியதாக பா.ஜ.க எம்.பி.க்கள் மீதும் குற்றம் சாட்டினார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு தீவிரம் கட்டி வருவதால் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்