என் மலர்
இந்தியா

வக்பு மசோதாவுக்கு ஆதரவளித்தால் பீகாரில் நிதிஷ்குமார் தோல்வி அடைவார் - கபில் சிபல்
- வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார்
நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டது.
முன்னதாக வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த வக்கீலும், மேல் சபை எம்.பி.யுமான கபில்சிபல் நிருபர்களிடம் கூறியதாவது:-
வக்பு மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்து நிறைவேற்ற ஆளும் கட்சி முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு மதத்திலும் சீர்திருத்தம் அவசியம். சீர்திருத்தம் என்பது நல்ல விஷயம்தான். ஆனால் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன? 2014 முதல் குறிப்பிட்ட ஒரு மதத்தை குறிவைக்கப்படுவதை நாம் பார்த்து உள்ளோம்.
நாட்டில் மதசார்பற்ற கட்சி யார்? என்பது இன்று தெரியவரும். பீகாரில் சட்டசபை தேர்தல் நடை பெறவுள்ள நிலையில், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மசோதாவுக்கு ஆதரவளித்தால் தோல்வியை சந்திக்கும்.
அதனால்,பா.ஜ.க. எளிதில் மசோதாவை நிறைவேற்று வதற்காக ஐக்கிய ஜனதா தளம் வெளி நடப்பு செய்ய வாய்ப்பு உள்ளது. சிராஜ் பஸ்வானும் இதையே பின்பற்றுவார் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






