search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    சபாநாயகர் பதவிக்கு போட்டியிட இந்தியா கூட்டணி திட்டம்
    X

    சபாநாயகர் பதவிக்கு போட்டியிட இந்தியா கூட்டணி திட்டம்

    • மக்களவையில் ஆளும் கூட்டணிக்கு இணையாக எதிர்கட்சிகள் உள்ளன.
    • 234 எம்.பி.க்கள் இருப்பதால் துணை சபாநாயகர் பதவியை பெற்றுவிட வேண்டும் என்று இந்தியா கூட்டணி விரும்புகிறது.

    புதுடெல்லி:

    18-வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டம் வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கூடுகிறது. ஜூலை 3-ந் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

    9 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத் தொடரில் முதல் நாளில் தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு எம்.பி.க்கள் பதவியேற்க உள்ளனர்.

    எம்.பி.க்கள் பதவியேற்புக்கு பிறகு 26-ந் தேதி சபாநாயகர் தேர்தல் நடக்கிறது.

    இந்த மக்களவையில் ஆளும் கூட்டணிக்கு இணையாக எதிர்கட்சிகள் உள்ளன. பாஜக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாஜகவுக்கு 240 இடங்கள் கிடைத்தது. தனிப்பெரும்பான்மை பெறாததால் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

    காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 234 உறுப்பினர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் தங்களுக்கு துணை சபாநாயகர் பதவியை விட்டு கொடுக்க வேண்டும், அந்த பதவியை தரமறுத்தால் சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவது என்று இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    234 எம்.பி.க்கள் இருப்பதால் துணை சபாநாயகர் பதவியை பெற்றுவிட வேண்டும் என்று இந்தியா கூட்டணி விரும்புகிறது.

    ஆனால் பா.ஜனதா சபாநாயகர் பதவியை தாங்களும், துணை சபாநாயகர் பதவியை கூட்டணி கட்சிக்குக்கும் வழங்க முடிவு செய்துள்ளது. கூட்டணி கட்சிகளான தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளத்தை திருப்திபடுத்த துணை சபாநாயகர் பதவியை வழங்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

    ஆனால் எதிர்கட்சியான இந்தியா கூட்டணி துணை சபாநாயகர் பதவிக்கு குறிவைத்துள்ளது.

    அந்த பதவியை கொடுக்காவிட்டால் எதிர்க்கட்சிகள் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட இருக்கிறது. ஒருமனதாக சபாநாயகரை தேர்வு செய்யும் பா.ஜனதாவின் முயற்சிக்கு இந்தியா கூட்டணி தடையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 17-ந் தேதி மக்களவையில் பாஜகவின் ஓம் பிர்லா சபாநாயகராக பணியாற்றினார். துணை சபாநாயகர் பதவி காலியாக இருந்தது.

    சபாநாயகர் அவையில் இல்லாத நேரத்தில் துணை சபாநாயகர் அவையை நடத்துவார். இதனால் அந்த பதவியை பெறுவதில் இந்தியா கூட்டணி தீவிரமாக இருக்கிறது.

    Next Story
    ×