என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
திருமணம் செய்ய வற்புறுத்தியதால் லாரியில் தள்ளி இளம்பெண் கொலை- காதலன் கைது
- பிரமிளாவிற்கு திருப்பதியை சிறு வயது முதலே தெரியும் என்பதால் நட்பாக பழகி வந்தனர்.
- போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது திருப்பதி பிரமிளாவை லாரியில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டம், மச்சரெட்டி மண்டலம், நெமலி குட்டா தாண்டாவை சேர்ந்தவர் பிரமிளா (வயது 23). இன்டர்மீடியா படித்து வந்த பிரமிளா படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஐதராபாத்தில் பச்சுப்பள்ளிக்கு வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் பச்சுப்பள்ளியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
ஏப்ரல் மாதம் பிரமிளாவின் கணவர் திடீரென இறந்து விட்டார். இதையடுத்து பிரமிளா பச்சுப்பள்ளியில் உள்ள இரும்பு கடையில் வேலை செய்து வந்தார்.
அப்போது தனது ஊருக்கு பக்கத்து ஊர் ரோட் பாண்டா தாண்டாவை சேர்ந்த திருப்பதி (25) என்பவரை சந்தித்தார்.
பிரமிளாவிற்கு திருப்பதியை சிறு வயது முதலே தெரியும் என்பதால் நட்பாக பழகி வந்தனர்.
பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது.
இந்த நிலையில் திருப்பதியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் செய்தனர்.
இந்த தகவல் பிரமிளாவிற்கு தெரியவந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரமிளா திருப்பதிக்கு போன் செய்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார்.
பிரமிளா உயிரோடு இருந்தால் தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது. எனவே பிரமிளாவை கொலை செய்ய முடிவு செய்தார்.
அதன்படி பிரமிளாவிற்கு போன் செய்து பச்சுப்பள்ளி மெயின் ரோட்டுக்கு நேரில் வந்தால் திருமணம் குறித்து பேசிக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
இதையடுத்து பிரமிளா பச்சுப்பள்ளி மெயின் ரோட்டில் திருப்பதியை சந்தித்தார். அப்போது திருமணம் செய்வது சம்பந்தமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த திருப்பதி அந்த வழியாக வந்த டேங்கர் லாரி முன்பாக பிரமிளாவை பிடித்து தள்ளினார். இதில் டேங்கர் லாரி பிரமிளா மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது பிரமிளா எதிர்பாராத விதமாக லாரியில் சிக்கி இறந்து விட்டதாக திருப்பதி போலீசாரிடம் தெரிவித்தார்.
போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது திருப்பதி பிரமிளாவை லாரியில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது.
போலீசார் வழக்கு பதிவு செய்து திருப்பதியை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்