search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் மதநல்லிணக்க நிகழ்வு- இந்து மடாதிபதிக்கு பாதபூஜை செய்த முஸ்லிம் தம்பதி
    X

    கர்நாடகாவில் மதநல்லிணக்க நிகழ்வு- இந்து மடாதிபதிக்கு பாதபூஜை செய்த முஸ்லிம் தம்பதி

    • வட கர்நாடகாவில் பல இடங்களில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
    • முஸ்லிம் தம்பதியினர் இந்து மடாதிபதிக்கு பாதபூஜை செய்த சம்பவத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் உள்ள ஹட்கோ நகரை சேர்ந்தவர் சிக்கந்தர் படே கான் (61). இவர் தார்வாட் மாவட்டம் காரகோப்பாவில் உள்ள ஓம்கார் மடாதிபதி ஸ்வரூபானந்தா சுவாமியின் பக்தர் ஆவார். ஓய்வுபெற்ற பேராசிரியரான சிக்கந்தர் படே கான் குடும்பத்தினர் நேற்று ஸ்வரூபானந்தா சுவாமியை தனது வீட்டுக்கு வரவழைத்தனர்.

    அவருக்கு சிக்கந்தர் படே கான் தன் மனைவியுடன் இணைந்து பாதப்பூஜை நடத்தி 'ஓம் நமசிவாய' என மந்திரத்தை கூறினர். இதையடுத்து அவரது வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை ஸ்வரூபானந்தா சுவாமியும், அவரது சீடர்களும் உண்டனர்.

    இதுகுறித்து சிக்கந்தர் படே கான் கூறுகையில், "நானும் எனது உறவினர்களும் நீண்ட காலமாக‌ ஸ்வரூபானந்தா சுவாமிஜியைப் பின்பற்றி வருகிறோம். அவ்வப்போது சுவாமி எங்கள் வீட்டுக்கு வந்து பூஜை செய்வார்.

    வட கர்நாடகாவில் பல இடங்களில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அண்மை காலமாக அரசியல் காரணங்களுக்காக சிலர் மத ரீதியான பிளவை ஏற்படுத்துகின்றனர்'' என்றார்.

    முஸ்லிம் தம்பதியினர் இந்து மடாதிபதிக்கு பாதபூஜை செய்த சம்பவத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    Next Story
    ×