என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
நித்யானந்தாவின் புதிய அறிவிப்பு
புதுடெல்லி:
சாமியார் நித்யானந்தா இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியதில் இருந்தே அந்த நாடு எங்கு இருக்கிறது என்ற கேள்விகள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
பசுபிக் பெருங்கடலில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என பெயர் சூட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் கைலாசா நாட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்துள்ளதாக நித்யானந்தாவின் சிஷ்யைகள் சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்பி வருகின்றனர்.
மேலும் கைலாசாவை இறையாண்மை மிக்க தேசமாக உருவாக்கும் நோக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபை முதல் சிறிய நாடுகள் வரை ஒப்பந்தங்கள் செய்துள்ளதாக கூறி அது தொடர்பான புகைப் படங்கள், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் நித்யானந்தாவின் சிஷ்யைகள் பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் பராகுவே நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் கைலாசா நாட்டுடன் செய்த ஒப்பந்தம் தொடர்பாக அவரது பதவி பறிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த புகாரை நித்யானந்தா தரப்பினர் மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக அவரது தரப்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கைலாசாவுக்கு வரமுடிய வில்லை என்ற ஏக்கமா? கவலையை விடுங்கள். கைலாசா உங்களை தேடி வரப்போகிறது என கூறியுள்ளனர். மேலும் நித்யானந்தா பேசும் ஒரு வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதில், கைலாசாத்திற்கு வர முடியவில்லையா? கவலைப்படாதே, கைலாசா உங்களிடம் வருகிறது. நீங்கள் எங்கு இருந்தாலும் பட்டங்கள் மற்றும் முனைவர் பட்ட வாய்ப்புகளுடன் கைலாசா உங்களை தேடி வரும்.
ஆன்மீகமும், அறிவியலும் கலந்த பி.எச்.டி. படிப்பை மேற்கொள்ள கைலாசா உங்களை தேடி வரும். இன்றே பி.எச்.டி. பயில நித்யானந்தா இந்து பல்கலைக்கழகத்தில் சேர பதிவு செய்யுங்கள் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் அருளாசி மற்றும் ஆன்மீக பயிற்சிகளை வழங்கி வரும் நித்யானந்தாவின் இந்த புதிய அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.