என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பச்சை மிளகாய் திருடிய 2 வாலிபர்களை தூணில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்த கிராம மக்கள்
- பல ஏக்கர் பரப்பளவில் பச்சை மிளகாய் பயிரிட்டு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
- 2 பேரில் ஒருவரை கட்டி வைத்து மற்றொருவரை கட்டப்பட்டவரின் தோள் மீது ஏற்றி நிறுத்தி வைத்து கடுமையாக தண்டித்துள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். அங்கு விளைவிக்கக் கூடிய பச்சை மிளகாய்க்கு சந்தைகளில் அமோக வரவேற்பு உள்ளதோடு அதிக விலையும் கிடைத்து வருவதால் விவசாயிகள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் பல ஏக்கர் பரப்பளவில் அந்த பகுதிகளில் பச்சை மிளகாய் பயிரிட்டு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக அந்த கிராமத்தில் உள்ள விளை நிலங்களில் பச்சை மிளகாய் அறுவடைக்கு தயாராக இருந்த சூழலில் அவ்வப்பொழுது பச்சை மிளகாய் திருட்டு போய் வந்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்ட தோட்டத்தில் காவல் காத்து வந்தனர்.
இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சிவன், மஞ்சுநாத் ஆகியோர் அதிகாலை வேளையில், விளை நிலங்களில் புகுந்து செழிப்பாக விளைந்திருந்த பச்சை மிளகாய்களை பறித்துக் கொண்டு அவர்கள் கொண்டு வந்திருந்த துணிகளில் மூட்டை கட்டிக்கொண்டு திருடி செல்ல முயன்றனர்.
அப்போது தோட்டத்தில் காவலுக்கு இருந்து வந்த விவசாயிகளில் சிலர், 2 வாலிபர்களையும் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும், திருடிய மிளகாய்களுடன் இருவரையும் கிராமத்தில் தெருத்தெருவாக அடித்து இழுத்துச் சென்றனர். தொடர்ந்து, அந்தப் பகுதியில் இருந்த கோவில் தூணில் அவர்கள் திருடிய மிளகாய்களுடன், 2 பேரில் ஒருவரை கட்டி வைத்து மற்றொருவரை கட்டப்பட்டவரின் தோள் மீது ஏற்றி நிறுத்தி வைத்து கடுமையாக தண்டித்துள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த கிராமத்தின் முக்கியஸ்தர்கள் 2 பேரையும் மீட்டு, மீண்டும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
பச்சை மிளகாய் திருடிய வாலிபர்களை கட்டி வைத்து அடித்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்