search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கைத்துப்பாக்கியுடன் நடனமாடிய திகார் சிறை அதிகாரி சஸ்பெண்டு
    X

    கைத்துப்பாக்கியுடன் நடனமாடிய திகார் சிறை அதிகாரி 'சஸ்பெண்டு'

    • ஒரு பாடலுக்கு தனது கைத்துப்பாக்கியுடன் நடனமாடினார்.
    • தீபக் சர்மா துப்பாக்கியால் சுட்டவாறு நடனமாடியதாக கூறப்படுகிறது.

    டெல்லி:

    டெல்லி திகார் ஜெயிலின் கீழ் உள்ள மண்டோலி சிறையில் உதவி கண்காணிப்பாளராக தீபக் சர்மா பணியாற்றி வந்தார். இவர் கோண்டா பகுதியில் நடைபெற்ற ஒரு பிறந்த நாள் விருந்தில் பங்கேற்றுள்ளார்.

    அந்த விழாவில் நடிகர் சஞ்சய்தத் நடித்த 'கல்நாயக்' படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு தனது கைத்துப்பாக்கியுடன் நடனமாடினார். அப்போது திடீரென தீபக் சர்மா வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டவாறு நடனமாடியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இதைப்பார்த்த பயனர்கள் தீபக் சர்மாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தீபக் சர்மாவை சஸ்பெண்டு செய்து சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    Next Story
    ×