search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கண் தானம் செய்வதில் புதுச்சேரி முதலிடம்
    X

    கண் தானம் செய்வதில் புதுச்சேரி முதலிடம்

    • சிறப்பு குழந்தையான நவதீப் பிறந்ததிலிருந்து உடல்நலக்குறைவால் இருந்து வந்த நிலையில் உயிரிழந்தார்.
    • புதுவையில் கடந்த 10 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 895 ஜோடி கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை ஆனந்தா நகரை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மனைவி மகாலட்சுமி.

    லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஆஷா பணியாளராக மகாலட்சுமி பணியாற்றி வருகிறார். இவர்களின் மகன் நவதீப் (வயது 11).

    சிறப்பு குழந்தையான நவதீப் பிறந்ததிலிருந்து உடல்நலக்குறைவால் இருந்து வந்த நிலையில் இறந்து போனார்.

    குழந்தையின் கண்களை தானம் வழங்க மகாலட்சுமி தம்பதியினர் முன்வந்தனர். இதையடுத்து அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கண்கள் தானம் செய்யப்பட்டது.

    இதனால் கருவிழி பாதிப்பால் பார்வையிழந்த 4 பேருக்கு பார்வை கிடைக்க இந்திய செஞ்சிலுவை சங்கம் ஏற்பாடு செய்தது.

    தங்களது குழந்தை இறந்தாலும் அவனது கண்கள் மூலம் 4 பேருக்கு பார்வை கிடைப்பது பெருமை கொள்வதாக பெற்றோர் தெரிவித்தனர்.

    புதுவையில் கடந்த 10 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 895 ஜோடி கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன.

    இதன் மூலம் யூனியன் பிரதேசங்களில் கண் தானம் செய்வதில் புதுவை முதலிடம் வகிக்கிறது.

    Next Story
    ×