search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நாளை 4-வது 20 ஓவர் போட்டி: ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா?
    X

    நாளை 4-வது 20 ஓவர் போட்டி: ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா?

    • இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
    • நாளை இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஹராரே:

    சுப்மன்கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 13 ரன்கன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் போட்டி நாளை ஹராரேவில் நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

    நாளைய போட்டியில் இந்தியா தொடரை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி பேட்டிங்கில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், ருதுராஜ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்கள் ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், பந்து வீச்சில் அலேஷ்கான், கலீல் அகமது, ரவி பிஷ்னோய், முகேஷ் குமார் ஆகியோர் உள்ளனர்.

    சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி, தொடரை இழக்காமல் இருக்க வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த அணியில் பென்னாட், டியான் மியர்ஸ், மாதேவேரே, முசராபானி, சத்தரா, ரிச்சர்ட் நிகரவா ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    வெற்றி கட்டாயத்துடன் களம் இறங்கும் ஜிம்பாப்வே அதற்காக கடுமையாக போராடும். ஆனால் இளம் இந்திய அணி வலுவாக இருப்பதால் ஜிம்பாப்வேவுக்கு கடினமாக இருக்கும்.

    Next Story
    ×