search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நேபாளத்தை தோற்கடித்தது வங்காளதேசம்: `சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி
    X

    நேபாளத்தை தோற்கடித்தது வங்காளதேசம்: `சூப்பர்-8' சுற்றுக்கு தகுதி

    • அபார பந்து வீச்சால் வங்காளதேசம் திணறியது.
    • வங்காளதேசம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கிங்ஸ்டவுன்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

    செயினட் வின்சென்டில் இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு தொ டங்கிய 37-வது லீக் ஆட்டத்தில் டி பிரிவில் வங்காள தேசம்-நேபாளம் அணிகள் மோதின.

    டாஸ் ஜெயித்த நேபாளம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் அபார பந்து வீச்சால் வங்காளதேசம் திணறியது.

    எந்த வீரரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. வங்காளதேசம் 19.3 ஓவர்களில் 106 ரன்னுக்கு ஆல்-அவுட் அனது.

    நேபாளம் தரப்பில் சோம்பால்கமி, சந்தீப் லமிச்சனே, ரோகித் பவுடல், திபேந்திர சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடி நேபாளமும் திணறியது.

    அந்த அணி 26 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்தது. அதன்பின் குவுல்மல்லா, திபேந்திர சிங் ஜோடி சிறிது தாக்குபிடித்து விளையாடியது. அவர்கள் அவுட் ஆனதும் விக்கெட்டுகள் சரிந்தன. நேபாளம் 19.2 ஓவரில் 85 ரன்னுக்கு ஆல்-அவுட் அனது. இதனால் வங்காளதேசம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சாகிப் 4 விக்கெட்டும், முஸ்தாபிசுர் ரகுமான் 3 விக்கெட்டும், ஷகீப்-கல்-ஹசன் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இந்த வெற்றி மூலம் வங்காளதேசம் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி 4 ஆட்டத்தில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றது.

    ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, நெதர்லாந்து, அயர்லாந்து, கனடா, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், உகாண்டா, பப்புலா நியூகினியா, நேபாளம் ஆகிய அணிகள் வெளியேற்றப் பட்டன.

    சூப்பர்-8 சுற்றுக்கான ஆட்டம் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.

    Next Story
    ×