search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐரோப்பிய கோப்பை கால்பந்து இங்கிலாந்து, பிரான்ஸ் 2-வது சுற்றுக்கு தகுதி
    X

    ஐரோப்பிய கோப்பை கால்பந்து இங்கிலாந்து, பிரான்ஸ் 2-வது சுற்றுக்கு தகுதி

    • டென்மார்க்-செர்பியா அணிகள் மோதிய போட்டியும் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.
    • பிரான்ஸ்-போலந்து அணிகள் மோதிய மற்றொரு போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

    முனிச்:

    17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

    குரூப் 'சி' பிரிவில் கடைசி லீக் ஆட்டங்கள் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது.

    இங்கிலாந்து-சுலொவேனியா அணிகள் மோதிய ஆட்டமும், டென்மார்க்-செர்பியா அணிகள் மோதிய போட்டியும் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.

    இங்கிலாந்து அணி 1 வெற்றி, 2 டிராவுடன் 5 புள்ளிகள் பெற்று சி பிரிவில் முதல் இடத்தை பிடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது. டென்மார்க் 3 டிராவுடன் 3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    மற்ற பிரிவுகளில் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகளின் நிலையை பொறுத்து சுலோவெனியா இருக்கிறது. அந்த அணிக்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது. செர்பியா வெளியேற்றப்பட்டது.

    முன்னதாக 'டி' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஆஸ்திரியா 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. இதே பிரிவில் பிரான்ஸ்-போலந்து அணிகள் மோதிய மற்றொரு போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

    ஆஸ்திரியா 6 புள்ளியும், பிரான்ஸ் 5 புள்ளியும், நெதர்லாந்து 4 புள்ளியும் பெற்று முதல் 3 இடங்களை பிடித்து 2-வது சுற்றில் நுழைந்தன.

    இன்று நடைபெறும் ஆட்டங்களில் இ பிரிவில் உள்ள ருமேனியா- சுலோவாக்கியா, பெல்ஜியம்- உக்ரைன் (இரவு 9.30) , எப் பிரிவில் இருக்கும் போர்ச்சுக்கல்-ஜார்ஜியா, துருக்கி- செக் குடியரசு (நள்ளிரவு 12.30) அணிகள் மோதுகின்றன.

    Next Story
    ×