search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சர்வதேச செஸ் போட்டி-10வது சுற்றில் வெற்றி: தொடர்ந்து முதலிடம் வகிக்கும் குகேஷ்
    X

    சர்வதேச செஸ் போட்டி-10வது சுற்றில் வெற்றி: தொடர்ந்து முதலிடம் வகிக்கும் குகேஷ்

    • டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது.
    • 10 சுற்றுகள் முடிவில் குகேஷ் 7.5 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

    விஜ்க் ஆன் ஜீ:

    டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது. 13 சுற்றுகளைக் கொண்ட இந்தத் தொடரின் 10-வது சுற்று நேற்று நடைபெற்றது.

    இதில் உலக சாம்பியனான சென்னை கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் உள்ளூரைச் சேர்ந்த மேக்ஸ் வார்மெர்டமை எதிர்கொண்டார். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 34-வது காய் நகர்த்தலுக்கு பிறகு வெற்றி பெற்றார்.

    மற்றொரு சென்னை கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சுலோவெனியாவைச் சேர்ந்த விளாடிமிர் பெடோசிவை தோற்கடித்தார். மற்ற இந்திய வீரர்களான ஹரி கிருஷ்ணா, அர்ஜூன் எரிகேசி, மென் டோன்கா ஆகியோர் தாங்கள் மோதிய ஆட்டங்களில் டிரா செய்தனர்.

    உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசாட்டோ ரோவ் செர்பிய வீரர் அலெக்சி ஷாரனாவை வீழ்த்தினார்.

    10 சுற்றுகள் முடிவில் குகேஷ் 7.5 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவர் 5 ஆட்டத்தில் வெற்றி பெற்றார். 5 சுற்றுகளில் டிரா செய்தார். இன்னும் 3 ரவுண்டு எஞ்சியுள்ளது.

    நோடிர்பெக் அப்து சாட்டோரோவ் 7 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பிரக்ஞானந்தா 6.5 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். ஹரிகிருஷ்ணா 4.5 புள்ளியும், எரிகேசி , மெண்டோன்கா தலா 3 புள்ளியும் பெற்றுள்ளனர்.

    சேலஞ்சர்ஸ் பிரிவில் பிரக்ஞானந்தா சகோதரி ஆர்.வைஷாலி 10-வது சுற்றில் செக் குடியரசுவைச் சேர்ந்த வான் நூயனிடம் தோற்றார். அவர் 5 புள்ளியுடன் 10-வது இடத்தில் உள்ளார்.

    Next Story
    ×