என் மலர்
விளையாட்டு
சர்வதேச செஸ் போட்டி-11வது சுற்றில் டிரா: முதலிடத்தில் நீடிக்கும் குகேஷ்
- டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது.
- 11 சுற்றுகள் முடிவில் குகேஷ் 7.5 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
விஜ்க் ஆன் ஜீ:
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடைபெற்று வருகிறது. 13 சுற்றுகளைக் கொண்ட இந்தத் தொடரின் 11-வது சுற்று நேற்று நடைபெற்றது.
உலக சாம்பியனான சென்னை கிராண்ட்மாஸ்டர் டி குகேஷ் சீனாவைச் சேர்ந்த ஒய் வீவை எதிர்கொண்டார். 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டம் டிரா ஆனது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் கிடைத்தது. குகேஷின் 6-வது டிரா இதுவாகும்.
மற்றொரு சென்னை கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அமெரிக்காவைச் சேர்ந்த பேபியானோ கருணாவை தோற்கடித்தார். இது அவரது 4-வது வெற்றியாகும். மற்ற இந்திய வீரர்களில் ஹரி கிருஷ்ணா, மென்டோன்கா ஆகியோரும் வெற்றி பெற்றனர். அர்ஜூன் எரிகேசி மோதிய ஆட்டம் டிரா ஆனது.
11 சுற்றுகள் முடிவில் குகேஷ் 8 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். பிரக்ஞானந்தா 7.5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நோடிர்பெக் அப்துசாட்டோ ரோவ் 7.5 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். மற்ற இந்திய வீரர்களான ஹரி கிருஷ்ணா 5.5 புள்ளியும், மெண்டோன்கா 4 புள்ளியும் , எரிகேசி 3.5 புள்ளியும் பெற்று உள்ளனர். இன்னும் 2 சுற்றுகள் எஞ்சியுள்ளன.