search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது கனவில்தான் நடக்கும்- ரமீஸ் ராஜா
    X

    இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது கனவில்தான் நடக்கும்- ரமீஸ் ராஜா

    • இந்தியாவுக்கு சவால் விடும் திறன் வங்காளதேச அணிக்கு இல்லை.
    • வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.

    கராச்சி:

    இந்திய கிரிக்கெட் அணி, வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை (2-0) முழுமையாக கைப்பற்றியது.

    கான்பூரில் நடந்த கடைசி டெஸ்டின் முதல் 3 நாட்கள் மழையால் பாதிக்கப்பட்டது. அதன்பின் போட்டி தொடங்கியபோது இந்தியா அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது. இதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18-வது டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது.

    இந்த நிலையில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கனவில்தான் நடக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் பலம் வாய்ந்த அணியாக இந்தியா திகழ்கிறது. இந்திய மண்ணில் விளையாடும் எந்த அணிக்கும் அங்கு டெஸ்ட் தொடரை வெல்வது கனவாக மட்டுமே இருக்கும். அது கனவில்தான் நடக்கும். சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்பது தற்போது ஒரு கனவாக மாறியுள்ளது.

    இதுபோன்ற வெற்றிகரமான அணிக்கு கடினமான நேரத்தை கொடுக்க வங்காளதேசம் நிறைய செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இந்தியாவுக்கு சவால் விடும் திறன் வங்காளதேச அணிக்கு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்த வங்காளதேச அணி டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×