என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: தருமபுரி மாவட்டத்தில் 90.45 சதவீதம் பேர் தேர்ச்சி
- தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
- இந்தாண்டு கூடுதலாக 1.01 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தருமபுரி:
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி தொடங்கி கடந்த மாதம் 8-ந் தேதி வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.
தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மொத்தம் 20651 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து 10593 மாணவர்கள், 10058 மாணவிகள் என மொத்தம் 18679 மாணவர்கள் 94 மையங்களில் தேர்வு எழுதினர்.
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
இதில் தேர்வு எழுதிய 10,598 மாணவர்களில் 9270 பேரும், 10058 மாணவிகளில் 9409 பேரும் என மொத்தம் மாவட்டத்தில் 18679 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 90.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 89.46 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு கூடுதலாக 1.01 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது