என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஆவின் பால் விநியோகம்- 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்க வசதி
சென்னை:
பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் சா.மு.நாசர் கூறியதாவது:-
எதிர்வரும் மழைக்காலம், பண்டிகை நாட்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அனைத்து இடங்களிலும் பால் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கூடுதல் வாகனங்கள் மூலமாக உடனுக்குடன் பால் விநியோகிக்க வேண்டும். பால் விற்பனை மையங்கள், பாலகங்கள் ஆகியற்றுக்கு அதிகாரிகள் அடிக்கடி சென்று ஆய்வு செய்து குறைகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.
பால் விநியோகம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களைப் பெற 18004253300 என்ற கைப்பேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய ஆவினின் @ AavinTN முக நூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களிலும் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.