search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதலீடுகள் குவிந்ததால் 40,500 பேருக்கு வேலை
    X

    முதலீடுகள் குவிந்ததால் 40,500 பேருக்கு வேலை

    • காஞ்சிபுரத்தில் மின்சார கார் பேட்டரி தயாரிப்பு நிறுவனம் தொடங்கப் படுவதன் மூலம் அங்கும் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • கிருஷ்ணகிரியிலும் டாடா நிறுவனம் தங்களது தொழிற் சாலையை விரிவாக்கம் செய்ய உள்ளது.

    சென்னை:

    சென்னையில் இன்று நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங் களில் கையெழுத்து போட்டுள்ளன. முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், ஹூண்டாய் நிறுவனம் என பல்வேறு நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாயை தமிழகத்தில் முதலீடு செய்துள்ளன.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இரும்பு தயாரிப்பு தொழிற்சாலை அமைய இருப்பதன் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் மின்சார கார் பேட்டரி தயாரிப்பு நிறுவனம் தொடங்கப் படுவதன் மூலம் அங்கும் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஸ்ரீபெரும்புதூரில் ஹூண்டாய் நிறுவனம் ஆலை விரிவாக்க பணியை மேற்கொள்ள உள்ளது. கிருஷ்ணகிரியிலும் டாடா நிறுவனம் தங்களது தொழிற் சாலையை விரிவாக்கம் செய்ய உள்ளது.

    இதனால் அந்த மாவட்ட மக்களும் பயன் அடைய உள்ளனர். கோத்ரேஜ் நிறுவனம் செங்கல்பட்டில் புதிய ஆலையை தொடங்க உள்ளதன் மூலம் அங்கும் வேலைவாய்ப்பு பெருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இப்படி உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக முதலீடுகள் குவிந்துள்ளதால் 40,500 பேருக்கு வேலை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×