என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஆவணி அமாவாசை- மேல்மலையனூருக்கு 900 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன
- அமாவாசை தினத்தில் மேல்மலையனூர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடப்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் செல்வது வழக்கம்.
- விநாயகர் சதுர்த்தி பண்டிகை 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
சென்னை:
அமாவாசை தினத்தில் மேல்மலையனூர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடப்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் செல்வது வழக்கம். ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் அங்கு கூடுவதால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
நேற்று ஆவணி மாத அமாவாசையையொட்டி மேல் மலையனூர் கோவிலுக்கு விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் 900 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
கோயம்பேடு, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், ஆரணி, திருவண்ணாமலை, பாண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து நேற்று காலை முதல் இரவு வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி பண்டிகை 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி கூடுதலாக சிறப்பு பஸ்கள் 30-ந்தேதி இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அரசு விடுமுறை தினம் என்பதால் பெரும்பாலானவர்கள் வெளியூர் செல்ல கூடும் எனக்கருதி வழக்கமான பஸ்களை விட கூடுதலாக பஸ்களை இயக்க முடிவு செய்திருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.