search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தென் சென்னை தொகுதியில் குஷ்புவை களமிறக்க பா.ஜ.க. திட்டம்
    X

    தென் சென்னை தொகுதியில் குஷ்புவை களமிறக்க பா.ஜ.க. திட்டம்

    • தமிழகத்தை பொறுத்தவரை இந்த முறை கணிசமான அளவுக்கு எம்.பி.க் கள் ஜெயிக்க வேண்டும் என்று டெல்லி மேலிடம் விரும்புகிறது.
    • ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்புள்ள பிரபலங்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    தேர்தல் காலங்களில் கூட்டணிகள் உறுதிப்படுத்தப்பட்டு வேட்பாளர்கள் அறி விக்கப்பட்ட பிறகுதான் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்படும்.

    ஆனால் இந்த முறை பா. ஜனதாவில் வேட்பாளர் பட்டியல் வரும் பின்னே. அலுவலகங்களை திறக்க வேண்டும் முன்னே என்ற ரீதியில் தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகத்தை உடனே திறக்கும்படி டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி எல்லா தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகங்கள் தயாராகி வருகின்றன. சமீபத்தில் திருநெல்வேலி தொகுதிக்கான அலுவலகம் திறக்கப்பட்டது.

    இன்று தென்சென்னை பாராளுமன்ற தொகுதியின் தலைமை தேர்தல் பணிமனை வேளச்சேரியில் ராம் நகர் 6-வது மெயின் ரோட்டில் இன்று திறக்கப்பட்டது. அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் தேர்தல் பணிக்குழு அமைப்பாளர் கரு.நாகராஜன், இணை அமைப்பாளர் கராத்தே தியாகராஜன், பொறுப்பாளர் பாஸ்கர், இணை பொறுப்பாளர் முனியசாமி, மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், சாய் சத்யன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தை பொறுத்தவரை இந்த முறை கணிசமான அளவுக்கு எம்.பி.க் கள் ஜெயிக்க வேண்டும் என்று டெல்லி மேலிடம் விரும்புகிறது. அதற்கு ஏற்ற வகையில் வேட்பாளர்களையும் தேர்வு செய்கிறார்கள்.

    தென்சென்னையில் போட்டியிட கரு.நாகராஜன், திருப்பதி நாராயன், ரமேஷ் சிவா, எஸ்.ஜி.சூரியா உள்பட சிலர் விருப்பம் தெரிவித்து உள்ளார்கள்.

    ஆனால் டெல்லி மேலிடம் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்புள்ள பிரபலங்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் தென்சென்னை தொகுதியில் நடிகை குஷ்பு களம் இறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. அவருடைய பெயரும் பரிசீலனை பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி குஷ்புவை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது:-

    எனக்கு எதுவும் தெரியாது. எப்படியாவது கட்சி வெற்றி பெற ணே்டும் என்பதே எல்லோரது எண்ணம். தமிழ்நாட்டில் இருந்தும் பா.ஜனதா எம்.பி.க்கள் பலர் வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் மோடி ஆசைப்படுகிறார். அதற்காகத்தான் எல்லோரும் உழைக்கிறோம். கட்சி என்ன கட்டளையிடுகிறதோ அதை செய்ய வேண்டியதுதான் எங்கள் கடமை என்றார்.

    Next Story
    ×