search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை இ-சேவை மூலம் இனி பதிவிறக்கம் செய்யலாம்
    X

    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை இ-சேவை மூலம் இனி பதிவிறக்கம் செய்யலாம்

    • ஆசிரியர் தகுதி தேர்வுதாள் மற்றும் 2-ம் சான்றிதழ்களின் மறு பிரதி தேர்வு வாரியம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
    • ரூ.160-யை இ-சேவை மையத்தில் செலுத்தி மனுபிரதி சான்றிழ் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    சென்னை:

    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை இ-சேவை மையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆசிரியர் தகுதித் தேர்வு 2012, 2013, 2017 மற்றும் 2019 ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வுதாள் மற்றும் 2-ம் சான்றிதழ்களின் மறு பிரதி தேர்வு வாரியம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    மேற்படி சான்றிதழ்கள் சார்ந்த தேர்வர்களுக்கு இணையதளத்தின் அரசின் இ-சேவை மையம் வழியாக வழங்க இருப்பதால் முதன்மை கல்வி அலுவலரின் வழியாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பப்படும் மறுபிரதி கோரும் விண்ணப்பங்களை இனி வரும் காலங்களில் நேற்று (15-ந் தேதி) முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

    மேற்கண்ட மறுபிரதி சான்றிதழ்கள் பெறுவதற்கு இ-சேவை மையத்தை அணுக வேண்டும். விண்ணப்பதாரர்களிடம் மனுபிரதி கட்டணத் தொகை ரூ.100 (ஆசிரியர் தேர்வு வாரிய வங்கி கணக்கு) மற்றும் இ-சேவை நிறுவனத்திற்கான சேவை கட்டணத் தொகை ரூ.60 சேர்த்து மொத்த தொகை ரூ.160-யை இ-சேவை மையத்தில் செலுத்தி மனுபிரதி சான்றிழ் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×