என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் பள்ளி மாணவிகள் மரியாதை
- சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோருடன் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
- உங்கள் பள்ளி வெள்ளி விழா நடைபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே வருகிறேன்.
சென்னை:
சென்னை மணலியில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 40 பேர் இன்று ஆர்.எஸ்.பி. மற்றும் பேண்டு வாத்தியக் குழு சீருடையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தினார்கள்.
அவர்களுடன் பள்ளி தலைமை ஆசிரியை ஜெக ஜோதி, உதவி தலைமை ஆசிரியை சித்ரா ஜெயசீலி, ஆசிரியைகள் ஷீஜா, சுஜாதா, கல்விக்குழு உறுப்பினர் காளியப்பன், மணலி எம்.பாலா, செல்வராஜ சோழன் ஆகியோரும், மாணவிகளுடன் வந்து மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோருக்கு மாணவிகள் இனிப்பு வழங்கினார்கள். பின்னர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோருடன் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அப்போது 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனுடன் ஆசிரியைகளும் மாணவிகளும் கலந்துரையாடினார்கள். அப்போது 'அய்யா பா.சிவந்தி ஆதித்தனார் தொடங்கி வைத்த மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வெள்ளி விழா கொண்டாட இருக்கிறது.
இந்த நேரத்தில் பள்ளிக்கு நீங்கள் வருகை தந்தால் பெருமையாக இருக்கும். 1999-ம் ஆண்டு பள்ளியை அய்யா பா.சிவந்தி ஆதித்தனார் திறந்து வைத்த போது இந்த பள்ளி மென்மேலும் வளர்ச்சிப் பெற்று கல்லூரியாக மாற வேண்டும் என்று விரும்பினார். அதற்கான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். நீங்களும் மனது வைத்தால் அது விரைவில் நிறைவேறும்' என்று தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்த சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், "உங்கள் பள்ளி வெள்ளி விழா நடைபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே வருகிறேன். அப்போது பள்ளி மைதானம் மற்றும் விளையாட்டுகளுக்கு தேவையான உதவிகளை செய்து தருகிறேன்" என்று உறுதி அளித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்