என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
இந்து அறநிலையத்துறை சார்பில் மயிலாப்பூரில் பிரமாண்டமாக உருவாக்கப்படும் கலாச்சார மையம்
- கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள 22.80 கிரவுண்ட் இடத்தில் இந்த மையம் கட்டப்பட உள்ளது.
- முதல் தளத்தில் 3 கலாச்சார பயிற்சி கூடங்கள், 120 பேர் அமரும் வகையில் செயல்திறன் கூடம், இடம்பெறும்.
சென்னை:
சென்னை மயிலாப்பூரில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் பிரமாண்டமாக கலாச்சார மையம் கட்டப்பட உள்ளது. இதற்காக ரூ.28.76 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
இந்த மையத்தை பற்றி அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள 22.80 கிரவுண்ட் இடத்தில் இந்த மையம் கட்டப்பட உள்ளது.
4 ஆயிரத்து 757 சதுர மீட்டர் பரப்பளவில் அமைகிறது. தரைதளத்தில் தமிழர் பண்பாடு, கலாச்சாரத்தை விளக்கும் வகையிலான காட்சி அரங்குகள் மற்றும் உணவு அறைகள் இடம் பெறும்.
முதல் தளத்தில் 3 கலாச்சார பயிற்சி கூடங்கள், 120 பேர் அமரும் வகையில் செயல்திறன் கூடம், இடம்பெறும். 2வது தளத்தில் 3 பல்நோக்கு கூடங்கள், 233 பேர் அமரும் வகையில் உணவு அறை இடம்பெறும்.
3-வது தளத்தில் 231 பேர் அமரும் வகையில் ஒரு பல்நோக்கு கூடம் 90 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையிலும் உணவு அறை இடம் பெறும். இதுதவிர ஆன்மீக நூலகம், மீட்கப்பட்ட சாமி சிலைகள், பாதுகாப்பு அரங்கம் இடம் பெறும்.
விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கும். இந்த கட்டிடத்தில் நியாயமான வாடகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.