என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஹஜ் பயணம் செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்
- கடந்த ஆண்டை போல், தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் பயணிகள் தங்கள் விருப்பத்தின் வரிசை அடிப்படையில் இரண்டு புறப்பாட்டு தளங்களை தேர்ந்தெடுக்கலாம்.
- வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது.
சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஹஜ்-2024-ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடம் இருந்து, மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிக்கும் முறை 4-ந் தேதி ஆன்லைனில் தொடங்கி வருகிற 20-ந்தேதியுடன் முடிவடைகிறது.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) "HAJ SUVIDHA" செயலியினை ஆண்ட்ராய்டு கைபேசியில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் பூர்த்தி செய்யலாம்.
ஹஜ் 2024-ல், விண்ணப்பதாரர்கள் ஹஜ் விண்ணப்பப் படிவத்தை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக சமர்ப்பிக்கலாம். இயந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை நிற பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உறைத்தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரிச் சான்றிதழ் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும்.
கடந்த ஆண்டை போல், தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் பயணிகள் தங்கள் விருப்பத்தின் வரிசை அடிப்படையில் இரண்டு புறப்பாட்டு தளங்களை தேர்ந்தெடுக்கலாம்.
வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது. குறைந்தபட்சம் 31.01.2025 வரையில் செல்லக்கூடிய இயந்திரம் மூலமாக படிக்கத்தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்க வேண்டும்.
ஹஜ் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு முன்பு, ஹஜ் 2024-ற்கான வழிமுறைகளை இந்திய ஹஜ் குழுவின் இணையதள முகவரி https://www.hajcommittee.gov.in/ மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்