என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![தி.மு.க. பொதுக்குழு 12-ந்தேதி கூடுகிறது தி.மு.க. பொதுக்குழு 12-ந்தேதி கூடுகிறது](https://media.maalaimalar.com/h-upload/2022/09/25/1767153-dmk.jpg)
X
தி.மு.க. பொதுக்குழு 12-ந்தேதி கூடுகிறது
By
Suresh K Jangir25 Sept 2022 11:00 AM IST
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- பொதுக்குழுவில் தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
சென்னை:
தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவிகளுக்கு இன்றுடன் வேட்பு மனுதாக்கல் முடிந்ததால் இந்த மாத இறுதிக்குள் வெற்றி பெறும் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகும். அதன்பிறகு தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும்.
இதைத்தொடர்ந்து வருகிற 12-ந்தேதி தி.மு.க. பொதுக்குழு கூடும் என்று தெரிகிறது. இந்த பொதுக்குழுவில் தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அறிவிக்கப்படுவார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
Next Story
×
X