search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. கூட்டணியில் கூடுதல் இடம் ஒதுக்க வேண்டி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஆலோசனை
    X

    தி.மு.க. கூட்டணியில் கூடுதல் இடம் ஒதுக்க வேண்டி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஆலோசனை

    • மேல்சபை தொகுதி ஒதுக்க வலியுறுத்த வேண்டும் என விவாதிக்கப்பட்டது.
    • தேர்தல் பணிகள், வாக்குச்சாவடி முகவர்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்டமாக தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. கடந்த தேர்தலில் 2 தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை கூடுதலாக 4 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநிலக் குழு கூட்டம் நடந்தது. அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும். ஒரு மேல்சபை தொகுதி ஒதுக்க வலியுறுத்த வேண்டும் என விவாதிக்கப்பட்டது.

    மேலும் தேர்தல் பணிகள், வாக்குச்சாவடி முகவர்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. கடந்த தேர்தலை விட அதிக ஓட்டுகள் பெறவும், தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு முழுமையாக வேலை செய்வது எனவும் முடிவு செய்தனர். அடுத்த வாரம் நடைபெறும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது இக்கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவை தெரி விக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

    Next Story
    ×