என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

54-வது நினைவு நாள்: அண்ணா நினைவிடத்தில் பிப்ரவரி 3-ந் தேதி எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
- அண்ணா நினைவிடத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளார்.
- அஞ்சலி செலுத்த மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை:
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு நாளான பிப்ரவரி (3-ந் தேதி) காலை 10 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அணிகளின் மாநில நிர்வாகிகளும், மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாடு மற்றும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், பிப்ரவரி 3-ந் தேதி அன்று ஆங்காங்கே அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் அஞ்சலி செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






