என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஆவடி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து பெண் பலி
- கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் வீட்டில் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரிந்தது.
- கியாஸ் சிலிண்டரில் இருந்த ரெகுலேட்டர் பழுதானதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக வாங்கி மாட்டி உள்ளனர்.
திருநின்றவூர்:
ஆவடியை அடுத்த கோவில்பதாகையை சேர்ந்தவர் ரோஜா (வயது 52). இவரது மகன் சங்கர்ராஜா. இவர் அதே பகுதி பிருந்தாவன் நகரில் டீக்கடை வைத்து உள்ளார். இவரது மனைவி அனிதா. இவர்களது மகள் கீர்த்திகா (11), மகன் கவுதம் (9) அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.
நேற்று இரவு ரோஜா சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சிலிண்டரில் இருந்து கசிந்து இருந்த கியாஸ் தீப்பற்றியது. மேலும் கியாஸ் சிலிண்டரும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் ரோஜா அவரது மகன் சங்கர் ராஜா மற்றும் சங்கர்ராஜாவின் மகள் கீர்த்திகா, மகன் கவுதம் ஆகிய 4 பேரும் உடல் கருகினர். அனிதா மற்றொரு சமையல் அறையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் வீட்டில் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரிந்தது. அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
உடல் கருகிய ரோஜா உள்பட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரோஜா இன்று மதியம் பரிதாபமாக இறந்தார். அவரது மகன் உள்பட 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கியாஸ் சிலிண்டரில் இருந்த ரெகுலேட்டர் பழுதானதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக வாங்கி மாட்டி உள்ளனர். ஆனால் அது சரியாக பொருந்தாமல் தொடர்ந்து கியாஸ் கசிந்து உள்ளது.
இதனை கவனிக்காமல் சமையல் செய்ய கியாஸ் அடுப்பை பற்ற வைத்தபோது கியாஸ் சிலிண்டர் வெடித்து ரோஜா பலியாகி விட்டார்.
இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.