என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தங்கம் விலையில் மேலும் சரிவு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தங்கம் விலையில் மேலும் சரிவு

    • தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழ்நிலையில் தங்கம் விலை குறைந்து இருப்பது பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை அளித்து உள்ளது.
    • தங்கத்தை போல வெள்ளி விலையும் கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று முன்தினம் பவுன் ரூ.38,080 ஆக இருந்தது. இது நேற்று ரூ.37,880 ஆக குறைந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று 2-வது நாளாக பவுன் ரூ.37,520 ஆக குறைந்துள்ளது. ஒரே நாளில் தங்கம் பவுன் ரூ.360 குறைந்து இருக்கிறது.

    நேற்று கிராம் ரூ.4,735-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ.4,690-க்கு விற்பனை ஆகிறது. கிராம் ரூ.45 குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழ்நிலையில் தங்கம் விலை குறைந்து இருப்பது பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை அளித்து உள்ளது.

    தங்கத்தை போல வெள்ளி விலையும் கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. கிராம் ரூ.62.30-ல் இருந்து ரூ.60. 50 ஆகவும் கிலோ ரூ.62.300-ல் இருந்து ரூ.60.500 ஆகவும் குறைந்துள்ளது.

    Next Story
    ×