search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுதந்திர தினத்தையொட்டி திருப்பூரில் தேசிய கொடிகள் தயாரிப்பு பணிகள் தீவிரம்
    X

    திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் தேசியக்கொடிகள் தயாரிப்பு பணி நடைபெற்று வருவதை காணலாம்.

    சுதந்திர தினத்தையொட்டி திருப்பூரில் தேசிய கொடிகள் தயாரிப்பு பணிகள் தீவிரம்

    • தமிழகத்தில் திருப்பூர், கோவை நகரங்கள் தேசியக்கொடிகள் தயாரிப்பில் பிரதான உற்பத்தி மையங்களாக உள்ளன.
    • சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடிகள் தயாரிக்க அனைவரும் தன்னெழுச்சியாக ஆர்டர்கள் தருகின்றனர்.

    திருப்பூர்:

    வருகிற 15-ந்தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 9-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை 'ஹர்கர் திரங்கா எனப்படும் இல்லம்தோறும் தேசியக்கொடி இயக்கத்தின் கீழ் மூவர்ண கொடியை தங்கள் வீடுகளில் ஏற்றி https://harghartiranga.com என்ற இணையதளத்தில் தங்கள் சுய புகைப்படங்களைப் (செல்பி) பதிவேற்Independence Day, National Flag, சுதந்திர தினவிழா, தேசிய கொடிகள்றுமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதையடுத்து நாடு முழுவதும் சுதந்திர தின விழாவை எழுச்சியாக கொண்டாடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி நாட்டு மக்களும் தயாராகி வருகின்றனர். அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பட்டொளி வீசி பறக்க தேவையான தேசியக்கொடி தயாரிக்கும் பணி நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் திருப்பூர், கோவை நகரங்கள் தேசியக்கொடிகள் தயாரிப்பில் பிரதான உற்பத்தி மையங்களாக உள்ளன. தற்போது சுதந்திர தினத்திற்காக திருப்பூர், கோவையில் தேசியக்கொடிகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த கொடி உற்பத்தியாளர் மோகன் கூறியதாவது:-

    சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடிகள் தயாரிக்க அனைவரும் தன்னெழுச்சியாக ஆர்டர்கள் தருகின்றனர். வீடுகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் தேசியக்கொடி ஏற்றி, சுதந்திர தினத்தை எழுச்சியாக கொண்டாட உள்ளது எங்களுக்கு கிடைக்கும் ஆர்டர் வாயிலாகவே தெரியவருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற அனுமதி அளித்ததால் ஆர்டர்கள் அதிக அளவில் வருகின்றன. ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த தேசியக்கொடிகளை விற்பனைக்கு அனுப்பி வைத்துவிட்டோம். 9-ந்தேதி முதல் தேசியக்கொடிகளை ஏற்றலாம் என்பதால் ஆர்டர் பெற்ற தேசியக்கொடிகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம்.

    பல பின்னலாடை நிறுவனங்கள், பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான கொடிகள் தயாரிக்க ஆர்டர் பெற்று தேசியக்கொடியை தைத்து வருகின்றன. 10க்கு 16 இன்ச், 18க்கு 22 இன்ச், 20க்கு 26இன்ச், 20க்கு 40 இன்ச், 40க்கு 60இன்ச் என பல்வேறு அளவுகளில் கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. ரூ.25 முதல் ரூ.250 வரை தேசியக்கொடிகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்டர்களுக்கு ஏற்றவாறு நீளமான கொடிகளும் தயாரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×