search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொடர் விடுமுறையால் சுற்றுலா செல்ல ஆர்வம்- விமான கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தொடர் விடுமுறையால் சுற்றுலா செல்ல ஆர்வம்- விமான கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு

    • துபாய்க்கு வழக்கமான கட்டணம் ரூ.10,558, நாளைய கட்டணம் ரூ. 21,509, 29 -ந்தேதி கட்டணம் ரூ. 20,808.
    • சென்னை-கோவா வழக்கமான கட்டணத்தை விட 2 மடங்கு அதிகரித்து இருக்கிறது.

    ஆலந்தூர்:

    மிலாது நபியையொட்டி நாளை அரசு விடுமுறை ஆகும். இதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு மற்றும் வருகிற 2-ந்தேதி காந்தி ஜெயந்தி என்று தொடர்ச்சியாக விடுமுறை தினங்கள் வருகின்றன. மேலும் பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டு விடுமுறை தொடங்கி விட்டதால் சென்னையில் வசிக்கும் பலர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா பயணத்தை திட்டமிட்டு விமான பயணங்களாக ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.

    தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகை காலங்களில் தான் பெரும்பாலும் தமிழகத்தில் இருந்து செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது இந்த தொடர் விடுமுறையில், சுற்றுலா தளங்கள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானங்களில், பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் விமானங்களில், பயணிகளின் டிக்கெட் கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளன.

    சென்னையில் இருந்து சுற்றுலா தளமான தாய்லாந்து நாட்டின் பாங்காக் செல்ல, வழக்கமான விமான கட்டணம் ரூ. 9,720 ஆகும். ஆனால் நாளை(28-ந் தேதி) கட்டணம், ரூ. 32,581 ஆகவும், 29-ந்தேதி ரூ. 28,816 ஆகவும் உள்ளது.

    துபாய்க்கு வழக்கமான கட்டணம் ரூ.10,558, நாளைய கட்டணம் ரூ. 21,509, 29 -ந்தேதி கட்டணம் ரூ. 20,808.

    இதேபோல் சிங்கப்பூர் செல்ல வழக்கமான கட்டணம் ரூ. 9,371. ஆனால் தற்போதைய கட்டணம் ரூ. 20,103, 29-ந் தேதி ரூ. 18,404 ஆக இருக்கிறது. மலேசியாவின் கோலாலம்பூர் செல்ல வழக்கமான கட்டணமான ரூ. 7,620யை தாண்டி நாளை ரூ.15,676, 29-ந்தேதி ரூ.14,230 கட்டணமாக உயர்ந்துள்ளது. இலங்கையின் கொழும்புக்கு ரூ.11234 (வழக்கமான கட்டணம் ரூ.6,698) ஆகும்.

    இந்தியாவுக்குள் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் விமான கட்டணமும் உயர்ந்துள்ளது. சென்னை- மைசூர் இடையே வழக்கமான விமான கட்டணம் ரூ.2,558. ஆனால் தற்போது இது ரூ.7,437 ஆக உயர்ந்து உள்ளது.

    சென்னை-கோவா வழக்கமான கட்டணத்தை விட 2 மடங்கு அதிகரித்து இருக்கிறது. நாளை ரூ.8,148, 29-ந்தேதி ரூ.9,771 ஆகும்.

    மதுரை, திருச்சி, கோவை போன்ற இடங்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணங்கள் பெரிய அளவில் அதிகரிக்க வில்லை. ஆனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமான கட்டணம் மட்டும் அதிகரித்துள்ளது. சென்னை தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.3,853, ஆகும். நாளை ரூ.11,173, 29-ந் தேதி ரூ.9,975 ஆக உள்ளது.

    Next Story
    ×