search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கையை முடக்கி போட்ட சிறுநீரக பாதிப்பு
    X

    விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கையை முடக்கி போட்ட சிறுநீரக பாதிப்பு

    • நீரிழிவு, தைராய்டு உள்ளிட்ட பிரச்சினைகளும் விஜயகாந்துக்கு ஏற்பட்டன.
    • கால்களை சுழற்றி சுழற்றி அதிரடியாக சண்டை போட்ட விஜயகாந்தால் எழுந்து நிற்க முடியாமல் போனது.

    தமிழக அரசியலில் நிச்சயம் ஒருநாள் முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர்வார் என்று எதிர் பார்க்கப்பட்டவர் விஜய காந்த்.

    ஆனால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கையே அடியோடு புரட்டிப் போட்டு விட்டது.

    முன்னாள் முதல்-அமைச்சர்களான கருணா நிதி, ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நேரத்திேலயே 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.ைவ தொடங்கி அதிரடியாக அரசியலில் குதித்தார்.

    2006-ம் ஆண்டு நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்று விஜயகாந்த் எம்.எல்.ஏ.வான நிலையில் அவரது கட்சி சார்பில் போட்டியிட்டவர்கள் 10 சதவீத ஓட்டுகளை பெற்ற னர். இது தமிழக அரசியல் களத்தில் திரும்பி பார்க்க வைத்த வெற்றியாகவே பார்க்கப்பட்டது.

    இதன் பின்னர் 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் தே.மு.தி.க. அதிக ஓட்டுகளை பெற்று அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளையும் கலங்கச் செய்து இருந்தது.

    இதன் மூலம் இந்த 2 கட்சிகளுக்கும் மாற்றாக தே.மு.தி.க. தலையெடுக்கும் என்றே அரசியல் நோக்கர் கள் கணித்திருந்தனர். ஆனால் கடந்த 2014-ம் ஆண்டு விஜயகாந்துக்கு ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு அவரது அரசியல் வாழ்க்கை யையே புரட்டிப் போட்டு விட்டது. அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடு களுக்கு சென்று சிகிச்சை பெற்ற நிலையிலும் விஜய காந்தின் உடல் நிலையில் பெரிய அளவில் முன்னேற் றம் ஏற்படவில்லை. முதலில் டயாலிசிஸ் சிகிச்சை மேற் கொண்டு வந்த விஜய காந்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் 2020-ம் ஆண்டு கொரோனா தொற் றும் விஜயகாந்துக்கு ஏற் பட்டது. நீரிழிவு, தைராய்டு உள்ளிட்ட பிரச்சினைகளும் விஜயகாந்துக்கு ஏற்பட்டன. இதனால் கணீர் குரலுக்கு சொந்தக்காரரான விஜய காந்தத்தால் பேச முடி யாமலேயே போய் விட்டது. கால்களை சுழற்றி சுழற்றி அதிரடியாக சண்டை போட்ட விஜயகாந்தால் எழுந்து நிற்க முடியாமல் போனது.

    இப்படி விஜயகாந்தின் உடல்நிலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பாதிப்புகளால் அரசியல் பணிகளை அவ ரால் சுறுசுறுப்புடன் மேற் கொள்ள முடியாமலேயே போய் விட்டது.

    இருப்பினும் விஜய காந்தை தே.மு.தி.க. தொடக்க விழா மற்றும் அவரது பிறந்த நாள் விழா ஆகியவற்றுக்கு குடும்பத்தி னர் அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருந்தனர். தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே தொண்டர் களை பார்த்து கையை மட்டும் அசைத்து வந்தார்.

    இப்படி விஜயகாந்தின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் தே.மு.தி.க. வையும் சரிவை நோக்கி தள்ளின. இதனால் 2011-ம் ஆண்டுக்கு பிறகு அந்த கட்சியால் வெற்றி பெற முடியாமலேயே போய் விட்டது.

    Next Story
    ×